“போராட்டத் திலகங்கள்”

1940ம் ஆண்டு முள்ளோயாவில் கோவிந்தன் கொலைக்கு பின் நடந்த ஒன்று. முள்ளோயா தோட்டத்தொழிலாளர்கள் மட்டுமல்ல அதனை அண்டிய பலதோட்டங்களிலும் சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்க பிரி வான ‘அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம்’ பரவத் தொடங்கி யது. அதன் காரனமாக முள்ளோயாத் தோட்டத்திற்கு அருகே உள்ள ‘கந்தலா ‘ எனப்படும் ‘ஸ்டேலன் பேர்க்’ தோட்டத்திலும் இக்கட்சியினை நிறுவுவதற்கு தொழிலாளி மெய்யப்பன் முன்வந்தபோது, அவருக்கு உரு துணையாக தொழிலாளர்கள் இராச கவுண்டன், குப்புசாமி, வீராசாமி, வேலாயுதம் போன்றவர்கள் துணையாக இருந்துள்ளனர்
இக்கட்சியினை தோட்டத்தில் அமைக்க ,அந்த தோட்டத்தின் வெள்ளை க்காரதுரையான ‘சி.ஏ.ஜி.போப்’ கடும்போக்கினை கைக்கொண்டார். அதன்படி துரையான போப், 1941ம் ஆண்டு ஜனவரியில் மெய்யப்பனை வேலையிலிருந்து நீக்கியதோடு பற்றுச் சீட்டையும் கொடுத்து தோட்டத் தைவிட்டு உடனடியாக போய்விடும்படியும் எச்சரித்த்ளார்..
இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் கண்டி மாநில செயலாளரோ இதனை கண்டித்து, 1941 ஏப்ரல் மாதம் 26ம் திகதி துரைக்கு கடிதம் அனுப் பினார். இதனை மறுத்த பேப் துரையோ “தோட்டத்தில் அத்துமீறியிருக்கு ம் மெய்யப்பனை கைது செய்ய கம்பளை நீதிமன்றத்திலே ஆணையை பெற்றதனால் 1941 மே 7ம் திகதி பொலீசார் ஸ்டேலன் பேர்க் தோட்டத்தி ற்குச்சென்றனர். அங்கு மெய்யப்பனை கைது செய்ய முடியவில்லை. ஆனாலும் அவர் 9ம் திகதி நீதி மன்றத்திலே சரணடைந்ததுடன் பிணையு ம் வழங்கப்பட்டது.
9ம்திகதி அன்றே மாலையில் கலஹா வில் இருக்கு ம் ‘லெவலென் தோட்டத்துரையான ஆர்.டி.பிளேக்கின் பங்களாவிற்கு இரா ப்போசனத் திற்கு சென்றுவிட்டு இரவில் வரும்போது , கார் போகாதபடி மரங்கள் வெட்டி குறுக்காகப் போட்டு போப் துரையை வெட்டி அடித்து கொலை செய்யப் பட்டார். கொலைப் பழி வீராசாமி, வேலாயுதம் மேல் விழுந் தது. அதன் படி 1942ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி திரு.வேலா யுதமும். மருநாளான 28ம் திகதி வீராசாமியும் தூக்குக் கயிற்றை முத்த மி ட்டனர். உண்மையான ஒரு போராட்டத்தினால் எத்தனை உயிர்களை மலையகம் பழி கொடுத்துள்ளது.
புகைப்படத்தில் முதலில் வேலாயுதம் அடுத்தவர் வீராசாமி இந்த மலையக வீரர்களை இன்றைய சமூகமும், அரசியலாரும் மறந்து விடக் கூடாது..நன்றி – “போராட்டத் திலகங்கள்” – சு.இராஜசேகரன்