மாற்று அரசியல் சக்திகளின் பலவீனம்.

(கருணாகரன்)
2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு, எதிர்காலத்தில் தமிழ்த்தரப்பினுடைய அரசியலைக் கையாள்வதைப் பற்றிச் சிங்கள அரசியல் உயர் மட்டத்தில் பல விதமான உரையாடல்கள் நடந்தன. இதன்போது பல்வேறு அபிப்பிராயங்கள் எழுந்தன. அதில் முக்கியமான ஒன்று, ஆயுதம் தாங்கிப் போரிட்ட ஈழவிடுதலை இயக்கங்களை எந்த வகையிலும் முதன்மைப்படுத்தக் கூடாது என்பது. அவை அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டாலும் சரி அல்லது சிங்களச் சமூகத்தோடு நெருங்கிச் செயற்படும் ஆர்வத்தை வெளிப்படுத்தினாலும் சரி, அவற்றை எந்தக் காரணம் கொண்டும் உள்ளே எடுக்கக் கூடாது என்றவாறாக.