மாலி: பயங்கரவாதத்துக்கு எதிரான முடிவுறாத யுத்தம்

(ஜனகன் முத்துக்குமார்)

கடந்த ஏப்ரல் 10ம் திகதி பிரான்ஸ் மற்றும் மாலி அரசாங்கம் இணைந்து நாடாத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போதிலும், மாலி அரசாங்கம் எதிர்கொள்ளும் பயங்கரவாதம் இலகுவில் தோற்கடிக்க கூடிய ஒன்றல்ல என்பதே வரலாற்று ரீதியில் நாம் கற்கும் பாடமாகும். பிரதானமாக நாட்டின் பயங்கரவாத குழுக்கள் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளை களைதல் மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான உதவிகளை பெறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மாலி முன்வைக்கும் அதேவேளை உள்நாட்டு பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்ச்சியாக பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன.