முகப்பு புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்…… அனந்தியே ஒரு போர் குற்றவாளி….

நல்லாட்சித் தத்துவம் எனக் கூறிக்கொண்டு சமாதானப் புறாவாக வலம்வருகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போர்க் குற்றவாளி தான் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அனந்தியே ஒரு போர் குற்றவாளி…. – Ratnasingham Annesley
புலிகளுக்கும் ஏனைய விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே உள்ள பாரிய வேறுபாடு புலிகள் பொது மக்களையும் மாற்றுக் கருத்தாளர்கள் மாற்று விடுதலை விடுதலை அமைப்பினரை தமது இயக்கத்தின் கொள்கையாக பிரகடனப்படுத்தி செயற்படுத்தினர். ஸ்தாபன மயப்படுத்தியே செய்தனர். மற்றைய இயக்கத்தினர் இவற்றை தமது நடைமுறைத்தவறுகளுடூ செய்திருக்கின்றனர்.

புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையைவிட அதிகம். எனவே புலிகளையும் ஏனைய விடுதலை அமைப்பினரையும் பொதுமைப்படுத்தி எல்லோரும் கொலைகள் செய்தனர், தவறுகள் செய்தனர் என்று கூறுவது தவறு. எவை எப்படி இருப்பினும் எண்ணிக்கை வேறுபட்டாலும் கொலைகள், தவறுகள் தான். ஒரு தேசிய இனத்தை மீள முடியாமல் படுகுழியில் தள்ளிய பாதகச் செயலைச் செய்தது புலிகளே! – Siva Easwaramoorthy
புலிகள் பொது மக்களைக் கொன்றது உண்மை. அது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் அதற்காக புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று அடிப்படையற்ற ஒரு கூற்றைக் கூறுவதும், ஏதோ புலிகளை விட இலங்கை இராணுவம் மேலானது என்று கருத்துப்படக் கூறுவதும் பொருத்தமாய் இல்லை. – Kumaran Xavier

உங்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கின்றேன். புலிகள் செய்த கொலைகள் பற்றிய அடிப்படையற்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கவில்லை. புலிகளால் கொலை செய்யப்பபட்டவர்களின் பட்டியல் முழுவதும் என்னிடம் கைவசம் இல்லை. ஆனால் ஒரு உதாரணத்தை மட்டும் தருகின்றேன். பிரபா – ரணில் சாமாதான? உடன்படிக்கை காலத்தில் வடக்கு கிழக்கில் இராணுவம் தெருவில் இல்லை முகாங்களுக்கு முடங்கிக் கிடந்தனர் ஸ்கன்டினேவியன் நாடுகளின் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கையில் நின்றனர். இந்தக்கால கட்டத்தில் வடக்கு கிழக்கில் புலிகள் மாத்திரம் தமது அலுவலகங்களை அமைத்துச் செயற்பட அனுமதிக்கப்பட்டனர். அதாவது புலிகளின் பிஸ்ரல் குழுவினர் மட்டும் செயற்பட்டனர். இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகையின் அன்றாட செய்திகளில் தினம் தினம் வடக்கு கிழக்கில் 3 – 5 தமிழ் பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கும். இவர்கள் புலி உறுப்பினர்கள் அல்ல. இது பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழ்ச்செல்வனிடம் கேட்கும் போது அவர் இக்கொலைகள் பற்றி சிரித்துக்கொண்டே தாங்கள் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவிப்பார். இதனை அந்தக் காலகட்ட தினசரி பத்திரிகைகளில் பார்க்கலாம். இத்தனைக்கும் இந்தப் பத்திரிகைகள் புலிகளின் ஆதரவுப் பத்திரிகைகள். இந்த நிகழ்வு மகிந்த ஜனாதிபதியாக பதவி ஏற்ற 1வது தவணை முதல் 6 மாத காலம் வரை தொடர்ந்தது. இனி சமாதான? காலம் ஆரம்பித்த காலம் தொடக்கம் மகிந்தாவின் முதல் 6 மாத கால கட்டம் வரையிலான நாட்களால் பெருக்கிப் பார்த்தால் நம்பமுடியாத அளவிற்கு ஒரு எண்ணிக்கை வரும். கூடவே இறுதி யுத்தத்தில் புலிகளால் சிறைப் பிடிகப்பட்ட நிலையில் இருந்த பொது மக்களை புலிகளை அழிப்பதற்காகவும் இதே வேளை தமிழ் மக்கள் என்பதற்காகவும் இலங்கை அரசு கொலைகளை மேற்கொண்டது உண்மையே. இதில் இந்த இறுதிக் கொலைகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் சம அளவினாலான பங்குண்டுஇலங்கை இராணுவம் மேலானது என்ற கருத்து எப்போதும் என்னிடம் இருந்தது இல்லை. – Siva Easwaramoorthy