மூதூர் மல்லிகை தீவு பெருவெளி சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்

மூதூர் மல்லிகை தீவு பெருவெளி எனும் இடத்தில் ஞாயிற்று கிழமை அறநெறி வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு திருமலை தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நாம் நேரில் சென்று உண்மை நிலவரத்தை பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். பெற்றோர் கூறியதாவது… முக நூலில் வேறு சில சம்பவத்தின் புகைப்படங்களை போட்டும், பிள்ளைகள் இறந்ததாகவும் செய்தியை பரப்பி வருகின்றனர். இது தமக்கு மிகவும் மன உளைச்சல்களை உருவாக்குகிறது என்றும் கூறினார்”.

ஆனால் அந்த பிள்ளைகள் ஆரோக்கிய நிலையில் உள்ளது..
இந்த கொடூர சம்பவத்தை செய்தவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஐந்து பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றார்களே தவிர அவர்களை இன்னும் அடையாள படுத்தப்படவில்லை. இச்சம்பவத்துக்கு உரியவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடின் மல்லிகை தீவு பெருவெளி மக்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அந்த பெற்றோர்கள் கூறினார்கள்.. இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுப்பட்ட நபர்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அவர்களை கைது செய்து சிறுமிகளின் பெற்றோருக்கு அடையாளப்படுத்தி சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு நிகழாத பட்சத்தில்… நாமும் மல்லிகை தீவு பெருவெளி மக்களோடு இணைந்து போராட்டம் செய்யவும் தயாராக உள்ளோம்.

(SDPT – Trinco)