மேற்குலகுக்கு ‘ஜனநாயகம்’ சொற்பதம் மட்டுமே

மேற்குலகும் அதன் உள்ளூர் ஆதரவாளர்களும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ‘ஜனநாயகம்’ என்ற சொற்பதத்தை ஒரு சாக்காக பயன்படுத்துகின்றன என்று ஐக்கிய நாடுகளின் அமைப்பில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகம் தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கூறினார்.

பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் வழங்கிய பதில்களும் வருமாறு:

கேள்வி: ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அது பாதுகாக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கொழும்பில் உள்ள மேற்குலக தூதரகங்களின் நிலையும் அதுவாகத்தான் இருக்கிறது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மேற்குலகமும் அதன் உள்ளூர் ஆதரவாளர்களும் ‘ஜனநாயகம்’ என்று கூறுவது அவர்களைப் பொறுத்தவரை ஒரு சொற்பதம் மட்டுமே. அதில் விடயமே இல்லை. அவர்களுக்கு கேந்திர முக்கியம் பெறும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒரு சாக்காக அது பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் மேற்குலக அதரவுடன் கூடிய மேல் வர்க்கத்தினருக்கு சொத்தில் பங்கு கிடைப்பதை அது உறுதி செய்கிறது. மேற்குலக நிதி உதவியில் கொழும்பில் செயற்படும் மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சாராத தொண்டு அமைப்புகளுக்கு அது உயர் தரத்திலான வாழ்க்கை வசதியையும் வெளிநாட்டுக்கான இலவச பயணங்களையும் வழங்குகிறது. மனிதர்களை செயற்கையாக இனம், மதம், மொழி, நிறம், பால் அமைப்பு என்ற வகையில் பிரித்துப் பார்ப்பதில் அவர்களுக்கு அக்கறை உள்ளது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும், மற்றும் சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாடுகளை இதனால் மறைத்துவிட அவர்களால் முடிகிறது.

ஜனநாயகம் என்பது மக்கள் அதிகாரம் அல்லது மக்கள் ஆட்சி என்று பொருள்படும். சாதாரண மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி பெரிய அளவில் அக்கறை காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது மதிப்புள்ள வாழ்க்கை, சுரண்டப்படாமல் இருப்பது அடக்கு முறை, கடன், அறியாமை இல்லாதிருப்பது, தமது மற்றும் தங்கள் பிள்ளைகளினதும் சமூகத்தினதும் நலன்களை அபிவிருத்தி செய்து கொள்வதுடன், இந்த இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளும் வழிவகைகளை தேடிக்கொள்வதாகும்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே. வி. பி. மற்றும் கொழும்பில் அமைந்துள்ள அரசுசாரா தொண்டர் அமைப்புகள் மேற்குலக ராஜதந்திரிகள் மற்றும் ஐ. நா. கூட்டிணைப்பாளர் ஹனா சிங்கர் உள்ளிட்டவர்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. சிரியாவில் இருந்த யுனிசெப் பிரதிநிதி என்ற வகையில் ஹனா சிங்கர் ஒரு சர்ச்சையில் சிக்கியது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். உலகில் மிகுந்த வன்முறையுடன் கூடிய இயக்கத்தினருடன் பேச்சு நடத்துமாறு 2015 மார்ச்சில் ஹனா சிங்கர் சிரிய அரசாங்கத்திடம், யுனிசெப் பிரதிநிதி என்ற வகையில் தொடர்ந்து கூறி வந்தார். அதன்பின் ஹனா சிங்கரின் கருத்துக்கள் தவறாக நிர்மாணிக்கப்பட்டவை என்று பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு யுனிசெப் உள்ளாகியது.

கேள்வி: எனவே ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது?

பதில்: ஆம் நான் மேலே குறிப்பிட்டவாறு எவ்வாறெனினும் ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் அக்டோபர் 26ஆம்திகதி ஆரம்பிக்கப்படவில்லை. அது 1978 இல் ஜே. ஆர். அரசாங்கம் பொருளாதாரத்தை திறந்துவிட்டு மேற்குலக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டின் சமூக பொருளாதார கொள்கையை தீர்மானிக்க அனுமதித்ததோ அப்போதே ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் ஆரம்பமாகிவிட்டது. இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் தேசிய பொருளாதாரத்திலேயே சார்ந்துள்ளது. எனினும் அதனைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு மேற்குலகத்திடம் இருந்தது. அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்களும் இதே முறையை ஆனால் கொஞ்சம் அதிகாரம் குறைந்த வகையில் பின்பற்றினார்கள். அதற்கு மாற்றாக எதனையும் முன்வைக்க அவர்கள் தவறினர். அவர்களது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பவே இது அமைந்தது.

நல்லாட்சி என்ற சிறந்த ஆளுமை திட்டத்தின் கீழ் மக்கள் எதிர்ப்பு மற்றும் ஜனநாயக கொள்கை எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மிக மிஞ்சிய உத்வேகம் கிடைத்தது. இவை அனைத்தும் ஜனநாயகம் என்ற பெயரிலேயே இடம்பெற்றன. சிறந்த ஆளுமை என்ற சொற்பதத்தை உருவாக்கிய உலக வங்கி, கடனில் சிக்கிய நாடுகளுக்கிடையே இந்த சொற்பதத்தை விளக்கிக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று நல்லாட்சி மிகப்பெரிய மத்திய வங்கி கொள்ளையுடன் இணைத்துப் பேசப்படுகிறது. இன்றைய போராட்டத்தில் மக்களைக் காண முடியவில்லை. அவர்கள் பெரும்பாலும் மெளனித்தவர்களாக உள்ளனர். இன்று மக்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். அவர்களது வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். வெறும் வார்த்தை ஜாலங்களை அல்ல.

ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே ஒரு ஜனநாயகவாதியாக இருந்தால் மக்கள் நலன்களுக்குத் தேவையானதை பொதுத் தேர்தல் மூலம் தீர்தானித்துக்கொள்ளட்டும் என்று கூறியிருப்பார். ஆனால் அதற்கு மாற்றாக அவரும் அவரது அரசியல் சகபாடிகளும் இதற்கு தீர்வுகாண மேற்குலகை நாடியுள்ளனர்.

கேள்வி: இப்போதைய நெருக்கடியை எவ்வாறு நீங்கள் விளக்குவீர்கள்?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சியும் மேற்குலகமும் அரசியல் நெருக்கடி என்று கூறும் விடயம் தனியொரு நிகழ்வு அல்ல. கடந்த 3 வருட காலமாக நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளின் பெறுபேறுகளே இவையாகும். ஜனாதிபதியின் தீர்மானங்களானவை பொருளாதார, நிதி, சமூக, நிறுவன, கலாசார, சூழல், உணவு, சக்தி மற்றும் அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய முறைமைச் சிக்கலின் கருத்துக்களாகும்.

மக்களின் மெய்மையைத் தொடாத வகையிலான அரசாங்கத்தின் மேற்குலக ஆதரவுடன் கூடிய தீவிர தாராளமயமான தேசியத்துக்கு எதிரான, பிரபலமற்ற கொள்கைகளை மக்கள் பெருமளவில் நிராகரித்துள்ளனர்.

பிணை முறி விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட மொத்த நட்டம் இன்னும் கணக்கெடுக்கப்படவில்லை. ஆனால் ஊழியர் சேமலாப நிதிக்கு ஏற்பட்ட நட்டம் பில்லியன் ரூபாக்களில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதி மட்டுமன்றி இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், தேசிய சேமிப்பு வங்கி ஆகியவையும் 31 பில்லியன் இலங்கை ரூபா நட்டமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதியின் நட்டம் 26 பில்லியன் ரூபாவுக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. (ஐலன்ட் 2018 பெப்ரவரி 5) அத்துடன் இது 3 சத வீத வட்டி அதிகரிப்பினை வழங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது பொதுக்கடன் மற்றும் கடன் சுமைக்கு மேலும் மில்லியன்களை சேர்த்துள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நிவார்ட் கப்ராலின் கூற்றின்படி 2018 ஜுலையில் இலங்கையின் பொதுக்கடன் 3 வருட காலத்தில் 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மொத்த வெளிநாட்டு கடன் 2014 இறுதி முதல் 33 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. (டெய்லி எப். டி. 10.09.2018)

மொத்த உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி 2017 இல் 3.19% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 16 வருடங்களில் இருந்த ஆகக் குறைவான சதவீதமாகும். வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதுடன் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய வங்கியின் 2018 ஆகட்ஸ் மாத அறிக்கை கூறுகிறது. தற்போதைய கணக்கு பற்றாக்குறை 1.1 பில்லியன் அமெரிக்க ​ெடாலர்களாகும். வெளிநாட்டுக்கடன் சுமை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. இது இலங்கையின் பொதுச் சொத்துக்களின் பெறுமதியை படிப்படியாகக் குறைத்து வருகிறது. தொழில் பொது நிறுவனங்கள், வசதிகள், காணி மற்றும் ஆறுகள் இத்யாதிகளின் பெறுமதி இவ்வாறு குறைந்து வரும் நிலையில் மேற்குலக ஆட்சிகள் சிலவற்றுக்கு அவற்றை எளிதில், குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இவ்வாறான முதன்மைச் சிக்கலை பாராளுமன்றத்தினால் தீர்க்க முடியாது. அதேநேரம் 2015 பொதுத் தேர்லிலிருந்து சொந்த விதிகளை மீறிய ஒருவரினால் அது எப்படியும் முடியாது.

கேள்வி: இது சாதாரண இலங்கையர்களின் வாழ்க்கைக்கு என்ன அர்த்தத்தை கற்பிக்கிறது?

பதில்: தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் அரசாங்க ஊழியர்கள், தொழில் சார்பாளர்கள், உள்ளூர் வர்த்தகர்கள் ஆகியோர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொருளாதாரம் சரிந்துள்ளது. வேலையில்லாமை, சரியான வேலை கிடைக்காமை, வேலை பாதுகாப்பின்மை, அத்துடன் அதிகரித்துச் செல்லும் கடன் சுமை, ரூபாவின் வீழ்ச்சி, பண வீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றினால் சம்பளம், வருவாய், ஓய்வூதியம், ஆகியவை பெருமளவு குறைந்துள்ளன. எமது தொழிலாளர்களில் 70 சதவீதத்தினர் அதிகாரபூர்வமற்ற துறைகளிலேயே பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு முறைகளுக்கான வசதிகள் இல்லை.

கேள்வி: பிரதமரை மாற்றுதல், பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல் பின்னர் அதனை கலைத்தல் ஆகிய ஜனாதிபதியின் தீர்மானங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இதற்கான காரணத்தை ஜனாதிபதியே நன்றாக விளக்கியுள்ளார். அவரையும் கோதாபய ராஜபக்ஷவையும் கொலை செய்யும் முயற்சி பற்றி வெளிப்படுத்தபட்டமை அதில் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் சம்பந்தப்பட்டதாக தெரிய வந்தமை, மற்றும் அதுபற்றி நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு முடியாமற் போனமை, ஜனாதிபதி அவ்வாறான கொலை முயற்சியின்போது கொல்லப்பட்டிருந்தால் பிரதமர் ஜனாதிபதியாக பதவியேற்க முடியும் என்று அரசியலமைப்பில் குறிப்பட்டுள்ளமை ஆகிய சம்பவங்களின் பின்னணியில் எந்தவொரு வேற்றுநாட்டு ஜனாதிபதியும் எவ்வாறு செயற்பட்டிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

கேள்வி: தமிழ் மக்கள் விடயம் எப்படி? சிக்கலைத் தீர்க்க தலையிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்குலக அதிகாரங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன. வெளியுலக தலையீட்டின் மூலம் தமிழர்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா?

பதில்: இலங்கையர்களான எம்மிடம் உள்ள பிரச்சினைகளை எம்மால் மட்டுமே தீர்க்க முடியும். வெளிநாட்டு தலையீட்டினால் அது முடியாது. அமெரிக்கா. ஐரோப்பா, கனடா மற்றும் குறிப்பாக அவுஸ்திரேலியா ஆகியவை சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் காப்பாளர்கள் என்ற பெருமையை இழந்துள்ளன. காலனித்துவம் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகியவை தொடர்பாக சூறையாடுதல் ஆகியவற்றுடன் சுதேசிகள் படுகொலை மற்றும் அடிமை வர்த்தகம் ஆகியவை மூலம் அப்பெருமையை அவை இழந்துள்ளன.

இலங்கையில் அவர்களின் மிகவும் இறுதியான அனுபவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியதால் இடம்பெற்ற மிலேச்சத்தனமான யுத்தமாகும். இந்த யதார்த்தத்தில் சிங்கள இராணுவம் மட்டுமின்றி மற்றைய தமிழர்களும் கொல்லப்பட்டனர். யுத்தத்தை விமர்சிப்பவர்கள் துரோகிகள் என தூக்கிலிடப்பட்டனர். அல்லது சுட்டுக்கொல்லப்பட்டனர். சிறுவர்கள் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு யுத்த முனைக்கு அனுப்பப்பட்டனர். இங்கும் வெளிநாட்டிலும் இருந்த தமிழர்கள் கப்பம் வழங்குமாறு அச்சுறுத்தப்பட்டனர்.

சாதாரண மனிதர்கள் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், ஜெர்மனியர், பிரெஞ்சுக்காரர் என்ற யாராக இருப்பினும் ஒரேவித அபிலாஷைகளையே கொண்டுள்ளனர். அவர்களது வாழ்க்கை மீது தீவிர தாராளமய கொள்கைகள் கட்டுப்பாட்டை விதிக்கின்றன.

உலக மயமாதல் என்பதன் கீழ் தீர்மானம் எடுப்பது உலகலாவிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தான் பிரிக்சிட் பிரச்சினையாகவும் உள்ளது. கிரேக்க மக்களின் போராட்டம் அல்லது இறைமையை மீளத் தாபிக்குமாறு ஐரோப்பியாவில் அதிகரித்து வரும் இயக்கமும் இதுபோன்றது தான்.

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சாதாரண தமிழர்களை நாம் மறக்கக் கூடாது. அவர்கள் ஜே. ஆரின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை தாராளமாயப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வெங்காயம், மிளகாய், கிழங்கு, மரக்கறி, புகையிலை. மற்றும் அரிசியைக் கூட குறைந்த விலையில் இறக்குமதி செய்து சந்தையில் குவிந்ததன் பின்னரே மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கத் தொடங்கினர்.

அத்துடன் மீனவர்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டது. 1983 இல் மீன் ஏற்றுமதியின் மூன்றில் ஒரு பங்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றது.

கேள்வி: நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் ஐ. நா. அதிகாரிகளுக்கு உள்ளதா?

பதில்: ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடுவதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது. இது ஐ. நா வின் நாடுகளுக்கிடையிலான இறைமை சமத்துவம் தொடர்பான சாசன கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

ராஜதந்திரிகள் மற்றைய நாட்டு உள் விவகாரங்களில் தலையிடுவதற்கான தடையாவது 1961 இன் வியன்னா உடன்படிக்கையின் ராஜதந்திர உறவுகளின் 41 ஆவது விதப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் ஜெர்மன் தூதுவர் ஜெரோம் ரோட் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோர் நாமல் ராஜபக்ஷவுக்கு டுவிட்டர் செய்தியொன்றை அனுப்பும்போது ஏற்பட்ட பிரச்சினையிலும் இலங்கையின் உள்விவகாரத்தில் மேற்குலக தலையீடு இடம்பெற்றிருந்தது. இலங்கை தொடர்ந்தும் ஒரு காலணி அவர்கள் ஆட்சியாளர் என்ற நிலையிலேயே அவர்கள் நடந்துகொண்டனர்.

இலங்கைக்கு சொந்தமாக அரசியலமைப்பு உள்ளது. அது எமது மக்களின் இறைமைக் குரல் ஆகும். அதற்கு சட்டங்கள் உள்ளன அது ஜனநாயக முறையில் இயங்குகிறது. ஜனாதிபதி தனது அதிகாரத்தை மக்களிடம் இருந்து பெறுகிறார். அரசியலமைப்பில் உள்ளவை பற்றி தீர்மானம் விதிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உள்ளது. இது அரசியலமைப்பில் இடம்பெறும் விடயங்களை பற்றி எழக்கூடிய கேள்விகளை விசாரிக்கவும் அது குறித்து தீர்மானிக்கவும் தனித்துவ அதிகாரத்தை கொண்டுள்ளது. மற்றைய ஜனநாயக முறையானது பொதுத் தேர்தலாகும். அதில் இறைமையுடன் கூடிய மக்கள் தமது விருப்பப்படி வாக்ககளிக்க முடியும்.

அமெரிக்க தூதுவருக்கும் உள்ள சாதக உரிமை இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதுவருக்கும் உண்டு. ஜெர்மனியருக்கு சரி என்றால் அது இலங்கையருக்கும் சரிதான் ஏனெனில் அனைத்து நாடுகளுக்கும் இறைமைச்சமத்துவம் உள்ளது.

எமது தலைவர்களுக்கு அரசியல் ஆர்வம், தைரியம் மற்றும் எமது நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கும் கௌரவம், இறைமை மற்றும் பிரதேச ஒருமைப்பாடு ஆகியவை இருக்கவேண்டும். எமது நாடு ஒரு சுதந்திரமுள்ள நாடு. இங்கு தைரியமிக்க தேசப்பற்றாளர்கள் இருக்கின்றனர்.

இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட்ட காரணத்துக்காக வெளிநாட்டு தூதுவர்களை வெளியேற்றிய சம்பவம் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளது. வியன்னா உடன்படிக்கையின் 9 ஆவது விதப்புரையின்படி 1991 இல் இலங்கையில் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராக இருந்த டேவிட் கிளாட்ஸ்டன் 1991 ஜூன் மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2011 டிசம்பரில் நேபாளம் அந்த நாட்டில் இருந்த ஐ. நா மனித உரிமைகள் அலுவலகத்தை மூடிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றின் அழுத்தத்துக்கு இடையிலேயே நேபாளம் அந்த அலுவலகத்தை மூடியது. நேபாள இராணுவம், நேபாள பொலிஸ் மற்றும் நேபாள ஆயுதம் தாங்கிய பொலிஸ் படை ஆகியவற்றை பயிற்றுவிக்கும் செயற்பாடுகளில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நேரடியாக பங்கேற்றதை நேபாளத்தின் தேசிய மனித உரிமை ஆணையாளர் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் ஜூன் மாதத்தில் சிறிய நாடான நேபாளம், தனது நாட்டில் இருந்த ஐ. நா. வின்அரசியல் விவகார திணைக்களத்தை

உடனடியாக மூடிவிடடு அதன் ஊழியர்கள் மூன்று மாதங்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியது. மேற்குலக நாடுகளின் உதிவியுடன் பிரிவினைவாத செயற்பாடுகளில் ஐ.நா. வின் மேற்படி திணைக்களம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்ததையடுத்தே இந்த தீர்மானத்தை நேபாளம் எடுத்திருந்தது. அதேநேரம் ஐ.நா. வதிவிட கூட்டிணைப்பாளரின் போர்வையில் மேற்படி திணைக்களம் அனுமதியற்ற அரசியல் ஆய்வில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வருடம் ஜூன் மாதத்தில் சிறிய நாடான நேபாளம், தனது நாட்டில் இருந்த ஐ. நா. வின்அரசியல் விவகார திணைக்களத்தை உடனடியாக மூடிவிட்டு அதன் ஊழியர்கள் மூன்று மாதங்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியது. மேற்குலக நாடுகளின் உதிவியுடன் பிரிவினைவாத செயற்பாடுகளில் ஐ. நா. வின் மேற்படி திணைக்களம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்ததையடுத்தே இந்த தீர்மானத்தை நேபாளம் எடுத்திருந்தது. அதேநேரம் ஐ. நா. வதிவிட கூட்டிணைப்பாளரின் போர்வையில் மேற்படி திணைக்களம் அனுமதியற்ற அரசியல் ஆய்வில் ஈடுபட்டதாகவும்

கேள்வி: மனித உரிமை பேரவையின் 30/1, தீர்மானத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறினால் தடைகளை விதிக்கப்போவதாக மேற்குலகம் அச்சுறுத்தி வருகிறது. இந்த தீர்மானத்துக்கு முன்னைய அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. மக்கள் இந்த தடை தொடர்பாக அச்சப்படுவார்களா?

பதில்: ஐரோப்பிய யூனியனும் கணேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனும் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். இதன்மூலம் ஐரோப்பிய யூனியன் 1991 இன் வியன்னா உடன்படிக்கையை அப்பட்டமாக மீறிவிட்டது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதை தொடர்புபடுத்தியே இந்த தடை பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான தடைகள் சர்வதேச சட்டப்படி சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் நாடுகளுக்குக்கிடையிலான சாசனம, நியமங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஆட்சிக் கொள்கைகள் ஆகியவற்றை மீறுவதாக அமையும் எனவே இலங்கை நட்பு நாடுகளில் இருந்து தனிமைப்படக்கூடாது என்பது முக்கியமானதாகும்.

நல்லாட்சி ஆட்சியில் இலங்கை அதன் நிதிச் செயற்பாடுகளுக்கு மேற்குலகையே நம்பியிருந்தது. இது நிதிச் சந்தையில் ஆபத்து நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் வங்கிகளின் வட்டி விகிதங்கள் அதிகரித்ததுடன் கடனை மீளச் செலுத்தும் கொடுப்பனவு காலமும் குறைந்தது. இது டொலரின் பெறுமதியை அதிகரித்தது. இலங்கை சீனாவின் கடன் பொறியில் சிக்கிக்கொண்டதாக பரவலாக கூறப்பட்ட போதிலும் 2014 இன் இறுதியில் சீனாவிடம் இருந்து பெற்ற கடன் இலங்கையின் மொத்த கடனில் 8% மட்டுமே அல்லது இலங்கையின் வெளிநாட்டு கடனில் 18.8% மட்டுமே ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்காக பெறப்பட்ட கடன் மொத்த கடனில் 2.1% மட்டுமே.

நாம் எம்மை சுதந்திரமான மக்களாக நினைக்க ஆரம்பிக்கவேண்டும். வெளிநாடுகள் எமக்கு தேவைப்படுவதை விட நாம் அவர்களுக்கு தேவைப்படுகிறோம். தடைகளை பற்றி பயப்படுபவர்கள் கியூபா மக்கள் கடந்த 56 வருடகாலமாக அமெரிக்காவின் தடைகளை சந்தித்துள்ளனர் என்பதை கவனிக்க வேண்டும். கடல் வழியே வெறும் 90 மைல் தூரத்தினால் மட்டுமே. அமெரிக்காவும் கியூபாவும் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடை விதிப்பு என்பது மேற்குலகத்தின் நடாடு வெளிநாட்டு கொள்கை உபகரணம். இது ஒரு அரசாங்கம் தனது விருப்பத்துக்கு மாறாக செயற்பட்டால் அதனை வழிக்கு கொண்டுவர அந்த நாட்டின் மக்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்துவது இதன் தாக்கமாகும். இதில் தடை விதிப்பினை ஏற்படுத்துவதை விட அதனை மேற்கொள்ளப்போவதாக விடுக்கும் அச்சுறுத்தலே முக்கியமனதாகும். இவ்வாறான அச்சுறுத்தலை பெரும்பாலான நாடுகள் நடைமுறைப்படுத்துவதில்லை. ஏனெனில் அவை அவற்றை விதிக்கும் நாடுகளின் பொருளாதாரத்தின் மீதே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அத்துடன் அச்சுறுத்தல் விடுக்கப்படும் நாட்டில் அந்த அச்சுறுத்தல் தேசாபிமானத்தையும் தேசிய வாத செயற்பாடுகளையும் அதிகரிக்கும் அவ்வாறான தடை விதிப்பு மற்றும் அதன் தன்மை குறிப்பிட்ட தடை விதிக்கப்பட்ட நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் தாங்கிக்கொள்ளும் என்பதைப் பொறுத்தே அமையும்.

இலங்கையின் மீதான தடைகள் மேற்குலக தடைகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவை ஆபிரிக்க, லத்தீன், அமெரிக்க ஆசிய அல்லது ரஷ்யாவில் இருந்து வரும் தடைகள் அல்ல அவை தன்னிச்சையாகவும் பல்நாட்டு தரப்பும் செயற்படுத்தும் தடைகளாக இருக்கலாம். கியூபா நாட்டின் மீது அமெரிக்கா தடை விதிப்பையடுத்து அதன் மக்கள் அதற்கு தைரியமாக முகம்கொடுத்தனர். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் மனித அபிவிருத்தி பட்டியலில் கியூபா 73 ஆவது இடத்திலும் இலங்கை 76 ஆவது இடத்திலும் உள்ளன. மேற்குலக தடைகளை விட ரணில் விக்கிரமசிங்கவின் மேற்குலக ஆதரவுடனான தீவிர தாராளமய கொள்கைகளுக்கே நாம் அதிகம் பயப்படவேண்டும்

தமரா குணநாயகம்