யார் இந்தத் திலீபன்?

எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை. ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை கூறுவதற்கும், காண்பதற்கும் ஒடுக்கப்பட்டோர் சிந்தனையும் – அதற்கான அரசியல் நடைமுறையும் இருக்கவேண்டும். இல்லாதபோது ஒடுக்குவோர் கண்ணோட்டங்களிலேயே வரலாறுகள் கூறப்படுகின்றது.