வடக்கு-கிழக்கு பிரிவு

(விஜய் பாஸ்கரன்)
இன்றைய அரசியலில் அதிகம் பேசப்படும் வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது பிரிவு விவகாரம்.இணந்து இயங்கிய வட_ கிழக்கு மாகாண சபையை ஜே.வி.பி வழக்குப் போட்டு பிரித்து வெற்றி கண்டது.இதன் பின்னால் முன்னைய அரசும் காரணமாக இருந்தது. 1970 ம் ஆண்டு முதற்தடவையாக என் சகோதர்ர் குச்சவெளி பிரிவு காரியாதிகாரியாக பொறுப்பேற்றார் .இது கட்டுக்குளம் பற்று என அழைக்கப்பட்டது.இதில் நிலாவெளி,இறக்கண்டி,கும்புறுப்பிட்டி,இரணைக்கேணி,குச்சவெளி,திரியாய்,புல்மோட்டை,தென்னமரவாடி ,பறண மதவாச்சி கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம்.இதில் ஏழு கிராம சேவகர் பிரிவுகள் இருந்தன.நிலாவெளியில் இருந்து முல்லைத்தீவைப் பிரிக்கும் பறையனாறு,கொக்கிளாய் கடலேரி வரை பரந்த எல்லையைக் கொண்டிருந்தது.

அழகிய வனப்பான கிராமங்களைக் கொண்ட இப்பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் இல்லை.புல்மோட்டை,தென்னமரவாடி,பறண மதவாச்சி ஆகிய கிராமங்களில் உள்ளவர்கள் யான்ஓயா,புடவைக்கட்டு,சலப்பை ஆறு ஆகியவற்றைக் கடந்தே திரிகோணமலை வரவேண்டும்.மழை காலங்களில் போக்குவரத்து தடைப்படும் .யான் ஓயா கரையைக் கூட நெருங்க முடியாதளவு வெள்ளம் விரிந்து பரந்து கடலில் பாயும்.

அன்றைய புதிய அரசில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றவர் கே.பி.ரத்னாயக்கா.இவர் காட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்.நன்கு தமிழ் பேசுவார்.இவர் பதவியா குடியேற்றத்தை ஊக்குவிக்குமுகமாக அனுராதபுரத்தில் இருந்து புல்மோட்டைக்கு தாராமாக பஸ் சேவைகளை கொடுத்தார்.மழைகாலங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு புல்மோட்டையேசு சேர்ந்த இஸ்லாமிய மக்கள் அனுராதபுரம் போகத் தொடங்கினர்.பின்னர் தமது பகுதிகளை அனுராதபுரத்தோடு இணைக்க கோரிக்கை வைத்தனர்.இதை அஅனுராதபுரத்தில் அரசியல்வாதிகள். வரவேற்றனர்.இதை அன்று திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் நேமிநாதன் கண்டுகொள்ளவில்லை .அவர் ஒரு செயலற்ற பா.உ.ஆக இருந்தார்..மூதூர் மஜீத் கூட இதைக்,கண்டுகொள்ளவில்லை .

ஆனால் என் சகோதர்ர் இதை விரும்பவில்லை.அன்றைய அரச அதிபர் திஸ்ஸ தேவேந்திரா மூலமாக இதைத் தடுத்தார்.அன்று உள்துறை அமைச்சராக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவின் உறவினர் அவர்.இதேவேளை அன்றைய ஹொரவப்பொத்தானை பா.உ. குச்சவெளியை அண்மித்த கள்ளம்பத்தை என்னும் இடத்தில் பெரும்பான்மை இனத்தவரைக் குடியேற்ற முயன்றார்.இதையும் என் சகோதர்ர் தந்திரமாக தடுத்தார்.பின்வெங்காய செய்கை என்ற பெயரில் குச்சவெளி திரியாய் பிரதேச மக்களுக்கு காணி வழங்கி குடியேற்றினார்.

இடதுசாரிக்கொள்கை கொண்ட என் சகோதர்ருக்கு இனவாதம் சவாலானது.இதை யோசித்தே புல்மோட்டை இணைவைத் தடுத்தார்.1971 இல் குச்சவெளி பொலிஸ் நிலையம் திறக்க லக்ஸ்மன்ன் ஜெயக்கொடி வந்தார்.அவருனான சந்திப்பில் சலப்பை ஆறு பாலம் போட கோரிக்கை வைத்தார்.அடுத்த ஆண்டு அந்த பாலம் கட்டப்பட்டது.அன்றைய அரசியல்வாதிகள் மனம் வைத்திருந்தால் புடவைக்கட்டு,யான்ஓயா பாலங்கள் கட்டப்பட்டிருக்கும்.இந்த நிலப்பரப்பு பிரிவும் தடுக்கப்பட்டிருக்கும்.ஆனால் 1973 இல் தம்பலகாம்ம் பகுதிக்கு இடம்மாற வேண்டிவந்தது.அவர் இடம் மாறியதும் புல்மோட்டை ,தென்னமரவாடி ,பறண மதவாச்சி அனுராதபுரத்துடன் இணந்தது.இதனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்த நிலப்பரப்பு அனுராதபுரத்துடன் இணைக்கப்பட்டது.இரு மாகாணங்களும் தொடர்பறுந்தன.

இந்த தவறான முடிவால் பின்னாட்களில் புல்மோட்டை இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டனர்.இது அறியாமல் நடந்த தவறு.இதை அன்று எந்த தமிழ்,இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினரும் கவனித்ததாக நான் அறியவில்லை.இந்த இணைப்பு இல்லாவிட்டால் திருகோணமலையில் இஸ்லாமியர் அதிகளவு செல்வாக்கு செலுத்தியிருப்பார்கள்.

இணைந்த வட கிழக்கு மாகாணசபையில் இப்பகுதிகள் உள்வாங்கப்பட்டதாக நான் அறியவில்லை.இதை மீண்டும் திருகோணமலையுடன் இணைக்க முயன்றால் நல்லது