வரலாற்றில் ஒரு பதிவு. ஈரோஸ் இன் துரோகம்

(Segar Chandramohan)

1986 ஆண்டு பகுதியில் யாழில் இருந்த பல முற்போக்கு அமைப்புக்கள் மாதமொருமுறை அல்லது இருமுறை ஒன்றுகூடல்கள் நடத்தின. இதிலே CP , LSSP , கிராமிய தொழிலாளர் சங்கம் (EPRLF ), கிராமிய உழைப்பாளர் சங்கம், சீவல் தொழிலாளர் நலன்புரி ஒன்றியம் (EPRLF ) , ஈழவர் முன்னணி ( ஈரோஸ்), தொழிழ்ச்சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் அடங்கும். இதை நான் சீவல் தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதியாக கலந்து கொள்வேன். விஜிதரனை கடத்திய நேரத்தில், இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க நாம் முடிவு செய்தொம்.
இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான இறுதி கூட்டம் யாழ் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் நடைபெற்றது. இதற்கு, விஜயானந்தன் (CP ), அண்ணாமலை (LSSP ) , கி பி ( கி .தொ. ச ), பரா ( ஈரோஸ்), கி. உ. ச பிரதிநிதி, மற்றும் பல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், நானும், சீவல் தொழிலார அமைப்பின் பிரதிநியாக கலந்து கொண்டேன். கூட்டம் ஆரமித்து நேரம், கிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பாராவை வெளியில் அழைத்து பேசிவிட்டு சென்றார். மீண்டும் உள்ளே வந்த பரா, தவிர்க்க முடியாத காரணங்களினால் தாம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று எம்மிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார். கூட்டத்தில் ஒரு சில நேரம் மௌனமாக நாம் வியப்பில் இருந்தோம். விஜிதரன் கடத்தலுக்கெதிரான ஊர்வலம் திட்டமிட்டபடியே நடைப்பெற்றது. யாழ் கச்சேரியில் ஊர்வலம் நிறைவு செய்யப்பட்டது.