விக்கினேஸ்வரனும் அவரது 40 நேர்மையற்ற திருடர்களும்

(Arun Ambalavanar)

பூகோள நடைமுறை யதார்த்தங்கள் அறம் என்பவற்றை கருத்திலெடுக்காத சுயநல சந்தர்ப்பவாதிகளும் Demagogy என்கிற அரசியல் வாய்ச்சவாடலை மட்டுமே முலதனமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் கூட்டணி இனிவரும் வடமாகாணசபைத்தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடிய அளவில் வாக்குகளை வெல்லப்போவதில்லை. எதிர்க்கட்சியாகுமளவுக்குக்கூட அதன் வாக்கு பலம் இல்லை. இதற்கான ஆதாரத்தை நடந்துமுடிந்த உள்ளூராட்சி தேர்தல் வாக்குகளில் காண்க. வாக்களிக்கும் கோலங்களில் ஆய்வுசெய்தால் சாதி முக்கியமான ஒரு காரணி. விக்கியரின் கட்சிக்கு கிடைக்க்கூடிய சாதிய வாக்குகள் இல்லை. யாழ் நகரை அண்டிய சில வெள்ளாள மேட்டுக்குடியினர் வெள்ளாள மாணவர் வெள்ளாள இளைஞர்தான் விக்கியரின் கட்சியின் பலம். இன்றைய விக்கி கட்சி அங்குரார்ப்பணத்தில் முக்கியமாக கலந்துகொண்ட மாலையிட்டு படங்காட்டிய அமைப்பு வட்டு இந்து வாலிபர் சங்கம். இது ஒரு கடுமையான வெள்ளாளர் சங்கம். வெள்ளாளர் மட்டுமே இச்சங்கத்தில் அங்கத்தவராகலாம்.

மேலும் விக்கியரின் கட்சி மறைமுகமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வடகிழக்கிலுள்ள மலைய மக்களுக்கும்(கிளிநொச்சி வன்னி) எதிரான கட்சி. மலையக மக்களுக்கு வெறும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு கேட்கும் போராட்டம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான வெகுஜன ஆதரவுப்போராட்டம் போல இன்று காலி வீதியில் நடைபெறும் பின்னேரத்தில் விக்கி கட்சி நடத்திய கூத்தில் கலந்துகொண்டவர்கள் வெறும் 600 பேர்தான்

வாக்களிக்கக்கூடிய 4 முக்கியமான சாதிப்பிரிவுகள்
1. வடக்கு இந்திய வம்சாவளித்தமிழர்
2. தலித்துகள்(15%)
3. கரையார்(12%)
4. வெள்ளாளர்(40%)
ஆகியவை எல்லாம் விக்கி கட்சிசார்ந்தோருக்கு எதிராகவே உள்ளூராட்சி தேர்தலில் வாக்களித்தன. கணிசமான யாழ் தலித் கரையார வாக்குவங்கி EPDP க்கிருக்க மன்னார் கரையார வாக்குகளும் இதர கரையார வாக்குகளும் முறையே செல்வம் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கும் கிடைத்தன.
அனந்தராஜின் செல்வாக்கு வல்வையில் விழ வல்வையிலேயே தமிழரசுக்கட்சி ஆதரவு பிரிவுக்கான ஆதரவு அதிகரித்தது. ரெலோ வரும் மாகாணசபைத்தேர்தலில் கூட்டமைப்பைவிட்டு விலகும் முட்டாள்தனமான மூடிவைசெய்யும் வாய்ப்பு குறைவு.
அரசியலில் ஒருவர் செய்த சேவைகள், உதவிகள் அடிப்படையிலும் பதவியிலிருந்த ஒரு அரசியல்வாதிக்கு வாக்களிப்பார்கள். இந்த அடிப்படையில் டக்ளஸையும் விக்கியையும் ஒப்பிடுங்கள்.

தனிப்பட்டரீதியில் டக்ளசாலும் விக்கியாலும் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பாருங்கள். 1994ம் ஆண்டிலிருந்து அரசியல்வாதியாகவும் அமைச்சராகவும் இருந்த டக்ளஸையும் 2013ம் ஆண்டிலிருந்து முதலமைச்சராகவிருந்த விக்கியாலும் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையை கூட்டி ஒப்பிட்டுபார்த்தால் டக்ளஸால் பயன்பெற்றவர்கள் அதிகம். விக்கியர் அபிவிருத்தியை பின்னிறுத்தி தேசியத்தைவைத்து பூச்சாண்டி வாய்சவடால் காட்டியவரே தவிர மக்களின் அன்றாட தேவைகளுக்குதவி அவர்களின் விசுவாசத்தை பெற்றவரல்ல. சொல்லப்போனால் வந்த பணத்தையே திருப்பி அனுப்பியவர். டக்ளஸ் உதாரணத்துக்கு சுனாமியால் பாதிக்கப்படாதவர்கள் விண்ணப்பித்தபோதும் பெரும்பணம் அரசு தருகிறபோது திருப்பி அனுப்பாமல் விண்ணப்பித்தவர்களுக்கு அள்ளிக்கொடுத்தவர். இதைவிட மாகாண சபையும் தேசிய பாராளுமன்றமும் வேறுவேறு ஆடுகளங்கள். விக்கியர் தமிழரசுக்கட்சி என்ற இரவல் சேலையில் படங்காட்டி வாக்கெடுக்க டக்ளஸ் சொந்த கட்சியில் புலிபுராணம்பாடிய சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கஜேந்திரகுமாரையும் தேசிய பாராளுமன்ற தேர்தல்களில் தோற்கடித்து வென்றவர். இன்றைய ஆடுகளத்தில் டக்ளஸை கூட்டமைப்பு தனது முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பு குறைவு. அப்படி துணிந்து அறிவித்தால் மாவையைவிட டக்ளஸ் அதிகவாக்குகளைபெற்று கூட்டமைப்பு முதலமைச்சராகலாம். சமூகவலைத்தளங்களில் படங்காட்டும் காகிதப்புலிகள் வடமாகாண வாக்காளர்களுக்கு எந்த அர்த்தமுமில்லாதவர்கள். ஏறத்தாழ 45% மலையகமக்கள் கிளிநொச்சியில் வாழ்கிறார்கள். இவரகளை கருத்தில்கொண்டு தனது மைத்துனனான EPDP சந்திரகுமாரை டக்ளசின் முதுகில் குத்த தூண்டி EPDP இலிருந்து பிரிந்து தனித்து போட்டியிட மதியுரைத்தவர் EROS/ LTTE பின்னணியிலிருந்து வந்த கருணாகரன் சிவராசா. கருணாகரன் எதிர்பார்க்காதவாறு EPDP உள்ளூராட்சி தேர்தல்களில் எதிர்க்கட்சியாக இரண்டாவது கூடிய வாக்குகள் எடுத்து கொள்கை அடிப்படையில் தமிழரசுக்கட்சிக்கு நெருக்கமாகிவிட்டது. விக்கியின் கூட்டாளிகளை மதிப்பிட்டு வாக்களிப்பவர்கள் இன்றைய வடமாகாண வாக்காளர்களே தவிர இணைய வெளிநாட்டு போராளீஸ் அல்ல. அவர்கள் மலையகமக்களின் வாக்குரிமையை பறித்த பொன்னம்பலத்தின் பேரன் கறுவாக்காட்டிலிருந்து Discovery நாலுசில்லுவாகனத்தில் வரும் கஜேந்திரகுமாரையும் வேட்டியும் செருப்புமாய் யாழில் அலையும் டக்ளசையும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அவர்கள் அகிலன் திருச்செல்வத்தை அடித்து கொன்றுவிட்டு தன்னுடைய 2 பெட்டைகளையும் பையனையும் இந்தியா கனடா அமெரிக்காவில் படிக்கவிட்டு புலிபுராணம் பாடும் பிரேமச்சந்திரனையும் இலவசமாக புலிவழக்குகளில் கைதானவர்களுக்காக வாதாடுகிற சுமந்திரனையும் ஒப்பிடுகிறார்கள். இதுவரைகாலமும் சம்பந்தனுக்கு சொந்தசொத்து சேர்த்த ஊழல் குற்றச்சாட்டில்லாததையும் இப்ப வந்த விக்கி இளைப்பாற தீர்வையற்ற வாகனம் வேண்டுவதையும் தன்னுடைய சொந்தக்காரன் நிமலன் கார்த்தியேயனுக்காக வக்காலத்துவாங்கி மக்களுக்கு வந்த பணம் திரும்பிபோக கரணமான விக்கியையும் ஒப்பிட்டு பார்கிறார்கள்.
அனந்தியும் விக்கியும் “தமிழரசு” என்ற தெருக்கடையிலிருந்து எடுத்த தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு அடிக்கிறார்கள்.

போருக்கு பின்னான சம்பந்தனின் முக்கியமான மெச்சத்தக்க பங்களிப்புக்கள் இரண்டு.
1. புலிகள் காலத்தில் அரசியலில் நிலைக்க சமரசம்போனவர் புலியழிய யதார்த்தத்தையும் அறத்தையும் அறிந்து
தனிநாட்டுக்கோரிக்கையை
பூகோள, அறம் சார்ந்த அடிப்படையில் கைவிடுவதாக அறிவித்தமை.
2. நடைமுறை தேர்தல் யதார்த்தத்தோடு தனக்குப்பின்னான ஒரு நல்ல
அரசியல் தலைவராக சுமந்திரனை தலைவாரி
பூச்சூடி கொணர்ந்தமை.

சம்பநதனின் தவறுகள் பலவீனங்களுக்கப்பால் இவை பெரிய காரியங்கள். நவீன கால அரசியல் ஒரு விளையாட்டு. ஆடுகளம். இதனை இப்போது இருக்கிற கட்சிகளுக்குள் அறம் தார்மீகம் என்பவற்றில் பெருமளவு வழுவாது புலிப்பாசிச கொடூரத்தில் தப்பிப்பிழைத்து வாழும் கட்சியான EPRLF வரதரணி தலைவர்களான Sritharan Sri Thirunavukkarasu, Siva Murugupillai ஆகியோரும் இக்கட்சியின் மதியுரைஞர் லண்டன்சீமை Shanthan K Thambiah ம் உணரவேண்டும்.

வழுவற்ற பரிசுத்தமான நேர்மை மட்டுமே சமகால தேர்தல் அரசியலில்,வாக்குகளை பெற்றுத்தரும் என்ற தவறான நம்பிக்கையையும் 21ம் நூற்றாண்டு இலங்கை சூழல் சனநாயகத்தில் போல்செவிக்வழி ரூசிய சதிப்புரட்சியோ மாவோவழி சீன வன்புரட்சியோ சாத்தியமில்லை என்பதையும் தோழர் நாபாவின் அரசியலிருந்து தோழர் டக்ளஸ் தேவாவும் மறுதலையாக டக்ளசின் அரசியலிலிருந்து நாபாவும் கற்றுக்கொள்ள விடயங்கள் உள்ளன என்பதையும் அரசியல் பரிசுத்தமான வேதமல்ல. ஆனால் நடைமுறைச்சாத்தியமான விதிகளைக்கொண்டு இயங்குவது என்பதையும் உணரவேண்டும். முக்கியமாக மூன்றாவது பாதை/கட்சி என்பதை அமைக்க முயலும் வரதரணி Varathar Rajan Perumal தோழர்கள் உங்கள் முதல் எதிரிகள் அருள்பிரகாசம் பாணி EROS பச்சோந்தி சந்தர்ப்பவாதிகளே என்பதை உணரவேண்டும்.