வெருகல் படுகொலை: ஈழவிடுதலைப் போராட்டதின் அதியுச்ச கொலைக் களம்

இதில் பல பெண் போராளிகள் பலர் பாலியல் வன்புணர்வு துன்பறுத்தல்களுக்கு பின்பு கொல்லப்பட்டதும் இந்நிகழ்வில்தான்.
இந் நிகழ்வுகள் நடைபெறுவதற்கு சில தினங்கள் முன் வரை மாற்றுக்கருத்தாளர்களையும் சகோதர படுகொலைகளையும் கேள்விகளுக்கு உட்படுத்தாத இப் போராளிகளை வெருகல் காட்டிற்குள் மறித்து பிரபாகரனால் அனுப்பப்பட்டவர்களினால் கொலைகள் அரங்கேறும் வரை தமக்கும் இது போன்ற நிலமை எதிர் காலத்தில் ஏற்படலாம் என சுய தற்பாதுகாப்பு எச்சரிக்கைகள் சிந்தனைகள் ஏற்பட்டிருக்கவில்லை. அது மாத்தையாவின் மனைவியிடம் வெள்ளைச் சேலையை பிரபாகரன் அனுப்பி வைத்து தனது கொலை வக்கிரத்தை காட்டிய போதாவது புரிந்திருக்க வேண்டும். ஆனால் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வன்னி நிலமைகள் அந்த சிந்தனையிற்குள் புலி சார்ந்த போராளிகள் வருவதற்கு இடம் வைத்திருக்கவில்லை. இது அன்றைய ஏன் இன்றைய போலித் தமிழ் தேசிய பேசும் சம், சும், விக், பொன் யாருக்கும் புரிந்து இருக்கவில்லை.

சகோதரப்படுகொலை ஒரே குரலில் எதிர்த்தும் இந்த பாசிம் எங்கு வரை பாயப் போகின்றது என்பதை விடாப்பிடியாக அமைப்பு ரீதியாக எடுத்து போராடி வந்தவர்களில் இதே பாசிசத்தால் தன்னை அழித்துக் கொண்ட போராளித் தலைவர் நாபாவும் இன்னும் இவரின் கருத்தை ஒத்தவர்களும் அறிந்தே இருந்தனர். அதனால்தான் ரெலோ என்ற அமைப்பு ரீதியான புலிகளின் கொலைச் செயற்பாடுகளுக்கு முன்பே சுந்தரம் படுகொலையிற்கு முற்பட்ட காலங்களில் இருந்தே இது மாதிரியான கொலைகளை கண்டித்தும் எதிர் வினையாக்கியும் அவரகள் செயற்பட்டு வந்தனர்.

ஐ. நாடுகள் சபையில் சிறிலாங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு சம்மந்தப்பட்டவர்களை களுவேற்றாமல் விடமாட்டோம் என்று குரல் கொடுப்பவர்கள் இந்த வெருகல் படுகொலைக்கும் இதனையொத்த கொலைகளுக்கும் குரல் கொடுப்பார்கள் ஆகின் மனித உரிமை என்ற கோஷம் அர்த்தம் பெற்றதாக அமையும். கூடவே ரோகண விஜவீராவை சங்காரம் செய்ய என புறப்பட்ட சிறீலங்கா அரசு ஆயிரம் ஆயிரம் சிங்கள இளைஞர்களையும் ஏன் கிராமத்து அழகிகளையும் வன்புணர்வு செய்து கொலை செய்து களனி கங்கையில் வீசியதையும் நாம் மனித உரிமை மீறல்களாக எடுத்து குரல் கொடுப்போம்.

வரவு செலவுத் திட்டதிற்கு ஆதரவு தரவேண்டும் பாராளுமன்றத்தில் என்ற பேரம் பேசல் பிரபாகரனுக்கும் சந்திரிகாவிற்கு இடையில் ஏற்பட்டு ‘ஆதரவு தருகின்றோம்… தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்கும்…” என்ற வாக்குறுதியை நம்பி வெருகல் ஆற்றை சமுத்திர வழியால் கடக்க இலங்கை கடற்படை அனுமதித்ததும் இதன் தொடர்ச்சியாக அரகேற்றபட்ட இந்த வெருகல் படு கொலையிற்கான பாவச் சுமையை சந்திரிகா அரசும் சுமந்துதான் ஆக வேண்டும். வழமை போல பாராளுமன்த்தில் வரவு செலவு திட்டத்திற்கு தற்போது போலல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ச்செல்வன் வாய்வழி பிரபாகரன் வெருட்டலால் ஆதரவளிகாமல் போனது என்பது புலிகளின் வழமையான நம்பிக்கை துரோகமானதும் இங்கு வரலாறு.

ஈழத் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் அதிகம் அறியப்படாத ஆனால் மிகவும் கொடூரமான கொலைக் களம் என்றால் அது வெருகல் காட்டு கொலைக் களம்தான். இங்கு மரணித்தவர்களின் துப்பாக்கிகள் இந்த கொலை களத்திற்கு சில தினங்களுக்கு முன்பு வரை எம்மைப் போன்றவர்களை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தாலும் முரண்பாடுகளை கருத்துக்களால் சந்திக்கால் துப்பாக்யினால் சந்தித்த இந்த நிகழ்வுக்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கும் நாம் எப்போதும் போல் எதிரானவர்கள்தான். போராடும் உரிமை மறுக்கப்பட்ட போராளிகளின் மரணங்களாக வெருகல் படுகொலையை எம்மால் பார்க்க முடிகின்றது