ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.

ஐன்ஸ்ட்டின் பிறந்தநாளில் இவர் இறந்தார்
என்றொரு பதிவைப் பார்த்தேன்.

கார்ல் மார்க்ஸ் பிறந்தநாளில் இவர் இறந்தார்
என்றொரு பதிவைப் பார்த்தேன்.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.

புதிதாய் என்ன சொல்ல?

காஸ்மாலஜி / க்வான்ட்டம் க்ரேவிட்டி / கருந்துளைக் கதிர்வீச்சு என்று ஹாக்கிங் குறித்து

நிறைய அறிந்திருக்கிறோம்.

அமெரிக்காவின் அனென்பெர்க் ட்ரஸ்ட் இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் புரிகிற எளிய நடையில் வடிவமைப்பவர்களுக்கு பரிசு என்றது.

ஏமியோட்ராஃபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ்
( AMYOTROPHIC LATERAL SCELEROSIS ) என்னும்
குணப்படுத்த முடியாத நரம்புநோயினால் பாதிக்கப்பட்டு
கை, கால், உடலியக்கம் பாதிக்கப்பட்ட ஹாக்கிங்
களத்தில் இறங்கினார்.

A BRIEF HIOSTORY OF TIME என்ற பாடத்தை உருவாக்கி
ஆறு மில்லியன் டாலர் வென்றார்.

‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற
அந்த மகத்தான 26 மணி நேர நீளப் படைப்பு –
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால்
தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது…

இந்தச் சேதிதான் இந்தப் பதிவின் –
இரங்கல் தவிர்த்த – முக்கிய நோக்கம்.

நிலாவைச் சுற்றி வரவேண்டும்
என்று ஆசைப்பட்டவர்….

விண்வெளிக்கு ஒரு பயணம் போய்விட்டு
வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டே
இருந்தவர் ….

போய்விட்டார்.

(Rathan Chandrasekar)