1968 டிசம்பர் 25: தமிழக வரலாற்றில் கருப்பு நாள் !

கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடு தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.