1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்!(பகுதி 6)


(அந்தோணி!)

எங்களுடன் வந்த ஏனைய இரண்டு லொறிகளும் எங்கு சென்றன என்பது தெரியாது. நாங்கள் முப்பத்தைந்து பேரும் இரண்டு அறைகளிலும் பிரிக்கப்பட்டு உறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டோம். நாளைக் காலை டொமினிக் அண்ணன் வருவார் என்று கூறினர் அங்கிருந்தவர்கள். முதலில் ஏன்தான் விடிந்ததோ என்று நினைத்தநான், இப்போது இன்னும் ஏன் விடியவில்லை என்று சிந்திக்கலானேன்! விடிந்தது. கிணத்தடிக்குச் சென்று முகம் கழுவும்படி கூறினர். அங்கே சவற்காரம் இருந்தது. ஒன்றுக்கு நான்கு தடவை முகத்துக்கு சோப் போட்டு உரஞ்சிக் கழுவினேன். ஏனையோரும் அப்படித்தான் செய்தனர். காலை உணவாக இடியாப்பமும் சொதியும், சாம்பாரும் கொடுத்தார்கள். உண்டுவிட்டு டொமினிக் அண்ணன் வருகைக்காகக் காத்திருந்தோம்.