34வது ஆண்டு நினைவில்…………

07.07.1986ம் ஆண்டு யாழ் மாவட்டத்தின் குருநகருக்கும் பாலைதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மக்கள் விடுதலைப் படையின் அன்றைய பிரதமதளபதியாகவிருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியா நோக்கி EPRLF இன் உறுப்பினர்கள் பயனித்த படகு ஒன்று சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்ததில் 7 தோழர்கள் உயிரிழந்தனர் . அப்படகில் 15 பேரளவில் பயனித்திருந்தனர் .குருநகரைச் சேந்த தோழர் கெனடி அப்படகிற்கு ஓட்டியாக சென்றார். அவரினுடைய கடுமையான முயற்சியினூடாக தோழர் டக்ளஸ் தேவானந்தா கரைக்குகொண்டுவந்து சேர்க்கப்பட்டார்.
ஏனைய தோழர்களின் மீட்புப்பணியினை தோழர்கள் மேற்கொண்டபோது தோழர்களான செண்பகன் ,சுகிர்தன் ,அசோக் ,இமாம் ,எட்வேட் , ஞானம் ,நாகராசா ஆகிய ஏழு தோழர்களும்
மரணமடைந்திருந்தனர்.
அதில் தோழர் நாகராசாவின் சடலம் கிடைக்கவில்லை . ஏனையவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர் . மூன்று நாட்களின்பின்பு மானிப்பாயிலுள்ள மயானத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் தோழர்களுக்கான அஞ்சலிகள் செலுத்தப்பட்டு இரானுவ மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன .

தோழர் செண்பகன் (அகிலன்)

உரும்பிரயினை பூர்வீகமாக கொண்டபோதும் இவர் கொழும்பில் வாழ்துவந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர் . இவருடைய கல்லூரியின் சமகால மாணவர்களும் தோழர்களுமான கபூர்,இப்ராகீம்.றொபின் போன்றவர்களுடன் 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து 1983 ம் ஆண்டின் இனக்கலவரம் வரை GUES என்னும் மாணவர் அமைப்பின் கொழும்பு மாவட்டத்தின் அமைப்புச் செயற்பாடுகளில் முக்கிய பங்கற்றியவர் .தோழர் கபூரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளில் முக்கியபங்ற்றியிருக்கின்றார்.குறிப்பாக தோழர் கபூர் தலைமையில் மாணவர் மத்தியில் முத்தமிழ் கலாமன்றம்என்ற மறைபெயரில்
இயங்கிய செயற்பாடுகளிலும் 1977ம் ஆண்டு கிழக்கு மாகானத்தில் ஏற்பட்ட சூறாவளிக்கு மேற்கொண்ட நிவாரணப்பணிகளையும் குறிப்பிடலாம். 1983ம் ஆண்டில் ஏற்பட்டஇனக்கலவரத்தில் கொழும்பில்
அவருடைய வீட்டிற்கு புகுந்த காடையர்கள் தந்தையாரையும் அண்ணனையும் படுகொலை செய்தனர்.எதிர்பாராதவிதமாக சம்பவதினத்தன்று தோழர் கபூருடன் நின்றிருந்ததால் அப்படுகொலையிலிருந்து தப்பியிருந்தார்.அவருடைய ஓரேஒரு சகோதரியுடன் உயிர்தப்பி யாழ் மண்ணை வந்தடைந்தார். இனக்கலவரத்தைத் தொடர்ந்து கொழும்பில் இயங்கிய அகதிமுகாம்களில் தங்கியிருந்த மக்கள் மத்தியில் தோழர் கபூர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் வேலைத்திட்டங்களிலும் பணியாற்றியிருந்தார்.யாழ் மண்னிற்கு வந்து மரணிக்கும் வரைக்கும் செம்மண் பிரதேசத்திலுள்ள குறிப்பாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட கூலிவிவசாயிகள்,மாணவர்கள், இளைஞ்ஞர்கள் மத்தியில் அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.அவருடைய குடும்பம் இனக்கலவரத்தில் உயிர்களை, சொத்துக்களை இழந்து நிர்க்கதியாகியபோதும் இவரிடம் குறுகிய இனவாதமோ அல்லது பழிவாங்கும் எண்ணமோ இருந்ததில்லை.சிங்கள மக்கள்மீதான நேச உறவும் ,ஈழ விடுதலையினூடாக முழு இலங்கைக்குமான புரட்சிக்கான விடுதலையில் தெளிவாகவிருந்தார்.

தோழர் சுகிர்தன் (பரமநாதன்)

கல்வியங்காட்டை பிறப்பிடமாக கொண்டவர் உயர்கல்வியை முடித்தபின்பு 1980 களின் ஆரம்பத்தில் 
ஜெர்மனியின் தலைநகரான பெர்லீனில் வாழ்ந்துவந்தார். ஜெர்மனியில் தோழர் ஜோர்ஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டஅரசியல் வேலைத்திட்டங்களில் இனைந்து பணியாற்றியவர்.கட்சியின் பிரச்சார வெளியீடுகள் மற்றும் நிதிசேகரிப்பு போன்ற விடயங்களில் முக்கிய பங்காற்றியவர்.1983ம் ஆண்டு ஏற்பட்ட
இனக்கலவரத்தினைத்தொடர்ந்து1984 ம் ஆண்டு பாலஸ்தீனவிடுதலை
இயக்கமொன்றின் பயற்சி முகாமில் பயிற்சிபெற்ற குழுவில் இவருமொருவராக இனைந்து பயிற்சியை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பி மரனிக்கும் வரைக்கும் பல்வேறு இரானுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்தக்கொண்டவர்.

தோழர் அசோக் (வில்பேட் மோகன்ரர்ஜ்)

இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1983 ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இரானுவப் பயிற்சியை முடித்து தாயகம்திரும்பி பல்வேறு இரானுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொண்டவர். குறிப்பாக இளவாலை இரானுவமுகாமுக்கு பொறுப்பாக இயங்கியதுடன் காரைநகர் கடற்படை முகாம்மீதான தாக்குகலுக்காக தோழர்களை தங்கவைத்து தயார்படுத்தியதிலும் முக்கிய
பங்காற்றினார்.

தோழர் இமாம் (கிருபானந்தம்)

தோழர் இமாம் சாவககச்சேரியைப் பிறப்பிடமாகக்கொண்டவர். தோழர் ரேபேட் அவர்களினூடாக கட்சிக்குள் இனைந்து கொண்டவர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டு வெளியில் வசித்து வந்தார். 1983 ஆண்டு
இனக்கலவரத்தினைத் தொடர்ந்து நேரடியாக போராட்டத்தில் இனைந்து கொண்டவர். இவரும் பாலஸ்தீனவிடுதலை இயக்கமொன்றின் போர்ப்பாசறையில் பயிற்சியை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியபின் அவர் மரனிக்கும்வரை யாழ் மாவட்டத்தில் பணியாற்றினார்.

தோழர் எட்வேட் (ஈஸ்வரன்)

கோப்பாயைப் பிறப்பிடமாகக்கொண்டவர். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் உயர் கல்வி பயின்றபோது தோழர் இராஜ ன் அவர்களினால் 1980 களின் ஆரம்பத்தில் GUES என்னும் மாணவர் அமைப்பில் இனைத்துக்கொள்ளப்பட்டவர். அவர் இறக்கும்வரை யாழ் மாவட்டத்தில்
குறிப்பாக கோப்பாய் தொகுதியிலுள்ள உயர் கல்விபயிலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞ்ஞர்கள் மத்தியிலும் அரசியல் பணியாற்றினார்.

தோழர் ஞானம் (திருச்செல்வம்)

கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.1983 ன் இனக்கலவரத்தினைத் தொடர்ந்து கல்வியை இடைநிறுத்திவிட்டு போரட்டத்தில் இனைந்து கொண்டவர். இரானுவப்பயிற்சியை முடித்துக்கொண்ட பின்பு வடகிழக்கில்
செயற்பட்டவர்.குறிப்பாக பாதுகாப்பு பிரிவில் நீண்டகாலமாக பனியாற்றியவர்.

தோழர் நாகராசா (விமலேந்திரன்)

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.1983ம் ஆண்டின் இனக்கலவரத்தினைத் தொடர்ந்து திருகோணமலையில் ஏற்பட்ட அசாதாரண
சுழ்நிலைகாரணமாக கல்வியைத் துறந்து போராட்டத்தில் இனைந்துகொண்டு
பின்நாளில் இரானுவப்பயிற்சியை முடித்து களத்தில் செயற்பட்டவர்.