“The Next Generation”

இப்போது அந்த நாடுகளின் மொழியை அறக்கற்ற ஒரு இலக்கிய மற்றும் சமூக நீதிக்கான செயற்பாடுகளை முன்நிறுத்திச் செயற்படும் ஒரு தலைமுறை தோன்றியிருக்கிறது. இது மிகப் பெரிய சந்தோசமான விடயம். இந்தத் தலைமுறையுடன் இணைந்து நாம் செயற்பட வேண்டும் அப்போது மிகத் தீர்க்கமான விடயங்களை அனைத்துத் தரப்பிற்கும் இலகுவில் எடுத்துச் செல்லமுடியும் என்றுணர முடிந்தத காலமாக நினைக்க முடிந்தது. அப்படியொரு நம்பிக்கை இருந்தது. ஆனால் அது அண்மைக் காலமாக மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து விட்டிருக்கிறது. புதிய சிந்தனையை புதிய மாற்றத்திற்கான வழிமுறையைக் கண்டடையாது,அதே சனாதன குருட்டடிச் சிந்தனைக்கு அந்தப் புதிய தலைமுறை அள்ளுப்பட்டுப் போவதனைக் காணுகிறேன்.

ஈழம் என்றொரு தேசத்தை அது தனது அறிவில் கண்டு கொள்ள மறுக்கிறது. இந்துமதம் என்பதை தனது அறிவில் கண்டுணர மறுக்கிறது. சைவத்தையும் தமிழையும் வளர்த்த எமது புலவர்கள் , நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லோருமே பார்ப்பனீயக் காவலாளிகளாய் அவர்களுடைய ஏவலாளிகளாய் தமிழை வைத்துத் தொண்டு செய்தார்கள் என்பதனைச் சொல்ல மறுக்கிறார்கள். அப்படித்தான் ஈழத்திற்கும் அவர்கள் தொண்டு செய்தார்கள் என்பதனை மறுத்து புதிய நிறுவல் ஒன்றை நிறுவுவதற்கு இவர்கள் துணை நிற்கிறார்கள். இவர்களுக்கு மொழி மீது இருக்கும் அதீத பற்று அப்படிச் செய்ய உந்துதலாக இருக்கிறது. எப்படி இவர்கள் புலிகளது தேசியத்தை தமிழ்ப்பற்றால் விளங்கிக் கொள்ளாது இருந்து தமிழ்த் தேசியம் அதுதான் எனப் போற்றி வந்தார்களோ புலிகளின் அழிவுக்குப்பின் பதிலாக வேறு ஒன்றைக் கைக் கொள்ளவேண்டி வந்து விடுகிறது. அதுவும் அவர்களை அழிவிலேயே கொண்டு சென்று விடும் நிலையை அவர்கள் ஒருபோதும் உணராது இருக்கிறார்கள்.

அவர்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம் அவர்களை ஒரு போதும் சுயமாகச் சிந்திக்க விடப் போவதில்லை. அந்தச் சிந்தனையற்ற நிலையை அவர்கள் தாமாக உணராது விட்டால் வரலாறு அவர்களையும் மன்னிக்கப் போவதில்லை.