அரசியல் தீர்வும் கைதுகளும் சிறையிலடைப்பும்

(சாகரன்)

கைதுகளும் சிறையில் அடைப்புகளிலும் சில நியாயங்கள் இல்லாமல் இல்லை. தேரரின் கைது, மகிந்த குடும்பத்தின் செல்ல வாரிசின் கைது இவற்றைத்தான் குறிப்பிடுகின்றேன். ஆனால் இவை நடைபெறும் காலம் எனக்குள் ஒரு கேள்விக் குறியை எழுப்பி நிற்கின்றது. கண்டி யாத்திரை சென்றவரின் மருமகன் ஒன்றும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தருவதில் விருப்புடையவர் அல்ல. சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதியை எரித்து நிறுதியவர். ஏன் கருணாவை உடைத்து வேகமாக புலியை இல்லாமல் செய்தவர். இதன் மூலம் நோர்வேயின் ஒஸ்லோ சமஷ்டி வாய்ப்பை இல்லாமல் செய்தவர். இவரின் அரசியல் பெரியப்பா 13 வதில் இருந்த அதிகாரங்களை பறித்தெடுத்து இணைந்திருந்ததை தமிழ் மாகாண அரசை பிரிக்க அத்திவாரம் போட்டவர். சில வெளிநாட்டுச்(மேற்குலக) சக்திகளின் விருப்பு இலங்கை முழுவதிற்குமான சந்தை வாய்ப்பு, தமது செ(சொ)ல்வாக்கு பிரதேசமாக இலங்கையை வைத்திருத்தல் என்பதே. இதற்கான வேண்டுதலை ஜேஆர் இன் மருமகன் தனது பதவியை(19 தேர்தல்களில் தோற்ற பின்பு கிடைத்த வெற்றி) தக்க வைத்துக்கொள அனுசரிக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் புதிய அரசியல் அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறித்திரியும் வேடம். ஆனால் மனத்தில் துளியளவும் சிறுபான்மை மக்களுக்கு உரிமை வழங்களில் வெறுப்புள்ளவர். எனவே தொட்டிலையும் ஆட்டி பிள்ளையை கிள்ளிவிடும் செயலாகவே இந்த கைதுகள் பரிணாமம் அடையும் என்பது என் பார்வை.

இம்முறை கண்டி யாத்திரை தேரர் தலமையில் அமபாந்தோட்டையிலிருந்து ஏற்படுத்த ஏற்படுத்தப்பட்ட ‘கிள்ளல்கள்’ இவை. வஞ்சம் தீர்க்க புறப்படுவது ரணிலுக்கு எதிரானதாக தோன்றினாலும் இதில் என்னவோ ஏமாறப் போவது….? பழி மட்டும் எப்பவும் போலவே சிறி லங்கா சுதந்திரக் கட்சி தமிழ் மக்களின் நண்பன் இல்லை என்று மீண்டும் உண்மைக்கு மாறாக எழுதப்படலாம் என்ற அரசியல் தட்ப வெப்ப நிலை ஏற்படுவது மட்டும் தெரிகின்றது. ஹரிணிகாவின்(பிரேம சந்திரா ஒரு இடதுசாரி) பிணை வழங்கல்கள் ‘இடதுசாரி’களின் இடம் மாறிய அணிவகுப்பு, கூடவே அவசரமாக சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்றத்தில் இடம் எல்லாம்(உள்ளிருந்தே குழப்ப) இந்த புதிய கண்டி யாத்தரைக்கு கொண்டு செல்ல பொங்கப்படும் பால்சோற்றிற்குள் போடப்பட்ட பயறு, கஜு கள். என்னவோ மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். இவற்றை மீறக் கிடைத்தாலும் வரதரின் வரைதலுக்கு கிட்ட வருமா என்பது கேள்விக்குறியே..?