‘சக்கரே‘!! ‘யாழ்ப்பாண கம்பஸ் கலவரத்துக்கு நீதானப்பா காரணம்‘??!!

(Yalini)

யாழ்ப்பாண ‘கம்பஸ் சயன்ஸ்பக்கல்றி டீன்‘ ஆக இருப்பவர் சற்குணராசா. 1996-2000ம் ஆண்டு காலப்பகுதியில் ‘ஆமி‘க்காரர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த போது ‘கம்பஸ்சில‘ படிக்கிற பொடியல் இவருக்கு வைத்த பட்டம் ‘சக்கர்‘. அந் நேரம் ‘சக்கர்‘ கோவில் வீதியில் நல்லுாருக்கு அருகாமையில் ‘கந்தன்கருனை‘ என்ற வீட்டுக்கு அருகில் உள்ள மேல்மாடி வீட்டில் வசித்து வந்தார். அந்நேரம் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் போராளிகளில் இருவர் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கும் முகாமைத்துட பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டு கல்வி கற்று வந்தார்கள். இப் போராளிகளில் ஒருவரின் சொந்த இடம் மன்னார். இன்னொருவர் கிளிநொச்சி. இரு போராளிகளும் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கிலோமீற்றர் துாரத்தில் இருந்த வயோதிபத் தம்பதிகளி்ன் வீட்டில் தங்கியிருந்தனர்.

இவர்கள் என்ன நோக்கத்திற்காக அங்கு தங்கியிருந்தார்களோ அந்த செயற்பாட்டை சற்றும் தளரவிடாது செய்து வந்தார்கள். அந்துடன் ‘கம்பசிலும்‘ படித்து வந்தார்கள். அந்தக் காலத்தில் வன்னியிலிருந்து தகவல்கள் வர பல நாட்கள் ஆகும். ஆனால் அவ்வாறு வரும் தகவல்கள் மிகப் பாதுகாப்பானதாக இருக்கும். இந்தக்காலம் என்றால் எப்பவோ குறித்த மாணவர்கள் ‘ஆமி‘யிடம் அகப்பட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு தற்போதய தகவல்ப் பரிமாற்றம் பாதுகாப்பற்றதாகவும் அத்துடன் நல்ல மனுசர்கள் இவர்களைக் காட்டிக் கொடுத்திருப்பர்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்த அப்பாவித் தம்பதிகளுக்கு தங்களுடன் இருப்பவை எல்லாம் ‘புள்ளைப் பூச்சிகள் அல்ல புலிகள்தான்‘ என்பது தெரியாது. இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு இரு பீடங்களையும் சேர்ந்த இவர்களின் நண்பர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டு ‘ஹோலுக்குள்‘ இருந்து கொண்டு இவர்கள் இருவரையும் தேடி வரும் ‘கம்பஸ்‘ மாணவர்கள் செய்யும் அட்டகாசங்களையும் அந்த வயோதிபத் தம்பதிகள் ரசித்துக் கேட்டுக் கொண்டு ஒரு புறத்தில் இருப்பார்கள். சில நேரம் இவர்களுக்குள் கடும் வாய்ச்சண்டையும் ஏற்படும். குறித்த இரு மாணவர்களையும் தேடிவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அப்பாவி மாணவர்களுக்கு இவர்கள் உண்மையில் யார் என தெரியாது.

ஒரு நாள் ‘சக்கர்‘ பற்றி ( சயன்ஸ்பக்கல்றி டீன் சற்குணராசா) அந்த மாணவர்களுக்கு இடையில் கருத்து மோதல் உருவாகியது. ‘சக்கர்‘ கள்ளன் என சிலரும் ‘சக்கருக்கு‘ ஆதரவாக சிலரும் வாதாடத் தொடங்கினர். இவர்களது வாதாட்டத்துக்கு ஆதரவு சேர்ப்பதற்காக, ‘சக்கருக்கு‘ எதிராக வாதிட்டவர்கள், மன்னாரில் இருந்து வந்திருந்த புலிப் போராளியான மாணவனையும் தமக்குச் சார்பாக இழுத்தனர். ஆனால் அம் மாணவன் அமைதியாக சிரித்தபடி நின்றான். மோதல் உக்கிர கட்டத்துக்கு வந்து துாசண வார்த்தைகளில் ஆரம்பிக்க அந்த வீட்டு வயோதிபர் கொஞ்சம் சத்தமாக இரும தொடங்கினார். அதைச் சாட்டாக வைத்து மோதல் செய்த மாணவர்களை மன்னார் மாணவன் அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினான்.

அந் நேரம் மாலை 6 மணிக்கு ஊரடங்கிவிடும். அதற்குள்ளேதான் இவ்வளவு ஆட்டங்களும் நடக்கும். ஒரு வீட்டில் யாராவது ஒரு நபர் வெளியிடத்தில் இருந்து ஒரு நாள் தங்கியிருந்தாலும் ‘ஆமிப்‘ பதிவு வேணும். அவ்வாறு பதியாமல் தங்கியிருந்தால் ஒரு கேள்வியும் இல்லாமல் ‘ஆமியால்‘ கைது செய்யப்பட்டு பல நாள் கும்பாபிசேகம் நடாத்திவிட்டு தங்கியிருந்தவன் அப்பாவி என்றால் மட்டும் விடுவிக்கப்படுவான்.

குறித்த புலி மாணவர்களுக்கு தகவல்களை சேர்ப்பதற்காக, எந்தப் பதிவும் இல்லாமல் அந்த வீட்டில் இரவு தங்கியிருப்பதற்கு வந்திருந்த ஒரு இயக்க உறுப்பினர் இவங்களின் சண்டையைப் பார்த்துவிட்டு ‘அண்ணை சக்கர் என்றவர் நல்லவரோ‘ என்று கேட்க ‘அவர் நல்லவரோ கெட்டவரோ தெரியாது. ஆனால் அவருக்கு நான் யார் என்று தெரியும்‘, அதோட மற்றவன் யார் என்பதும் அவனிட ‘ஹெட்‘க்கும் தெரியும்‘ என்று மட்டும் சொன்னான்.

2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்து அந்த இருவரும் யாழ்ப்பாணத்தை விட்டு எந்தவித காட்டிக் கொடுப்பும் இன்றி உயிருடன் தப்பி வன்னிக்குச் சென்றதும் ஒரு வரலாறுதான்.

அந்த நேரத்தில் இயக்கத்தைக் காட்டிக் கொடுக்க விரும்பாத ‘சக்கர்‘ தற்போது தலைகீழாக மாறியிருப்பதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவாக இருக்கும் என்றால் கீழே இருக்கிற அறுவுத்தலை வாசிங்யுங்கோ

யாழ்ப்பாண கம்பசில படிக்கிற பெடியலு்கு ஒரு தயவான அறிவுறுத்தல்.

‘வடிவேலுவின் பகிடிகளை ஒருக்கால் திருப்பித் திருப்பிப் பாருங்கோ‘. ஏற்கனவே எங்கட ‘ஹிட்டினி‘ எல்லாத்தையும் புடுங்கிப் போட்டு வைத்திருக்கிறாங்கள். மீண்டும் எங்களை உசுப்பேத்துறாங்கள். அதைப்பார்த்து நீங்கள் கொதிச்சீங்கள் என்றால் உங்கட ‘ஹிட்டினியையும்‘ வெள்ளை வானுக்குள்ள வைச்சுப் புடுங்கிப் போட்டு விட்டுவிடுவாங்கள்.

இதைத்தான் அவங்களால ‘ஹிட்டினி‘ புடுங்குப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ‘சக்கரும்‘ மற்றைய லெக்சர்மாரும் சொல்லுறாங்கள். ‘பேசாமல் இருங்கோ.. பேசாமல் இருங்கோ.. அவங்கள் ஆடினால் ஆடிப்போட்டு இருக்கட்டும். சிங்களத்தியல் அவிட்டுப் போட்டு ஆடினால் நீங்கள் பாக்காமல் இருங்கோ‘ என்டு படிச்சுப் படிச்சு சொல்லியும் நீங்கள் கேட்காமல் அவங்களைக் கலைக்கத் தொடங்கிவிட்டீங்கள். இனி வெள்ளை வானுக்குள்ள ஏத்தி உங்கட ‘ஹிட்டினி‘யைப் புடுங்காமல் விடுவாங்கள் என்டு நினைக்கிறீங்களோ….

உங்கட வீரத்தை கம்பசில அடிபட்ட வீடியோவில பார்த்த போது நீ்ங்கள் அந்த விசயத்துக்கு சரிப்பட்டு வரமாட்டீங்கள் என்டு நல்லா விளங்குது. எந்த விசயம் என்டு கேக்காதையுங்கோ…

‘உங்களால் காயப்பட்டதாக யாழ்ப்பாண ஆசுப்பத்திரிக்கு கொண்டு போன சிங்கள மாணவியை 24ம் வாட்டுக்கு முன்னால வைச்சு ‘சக்கர்‘ கவலையோட கதைத்தது என்ன தெரியுமோ? ‘ எல்லாரும் கொஞ்சம் தண்ணி பாவிச்சுட்டு நின்டவங்கள்… அவங்கள் எல்லாருக்கும் பதிலா நான் உங்களிட்ட மன்னிப்புக் கேக்கிறன்‘ என்டு சொன்னது யாருக்குத் தெரியும்.

கண்டி நடனம்…… கு…… நடனம் போன்ற விசயங்களும் புத்த பெருமான் எங்கட வீட்டுக்கு முன்னால குடியேறுற விசயங்களும் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் ‘நடக்குறதே வேற‘…. அப்படி என்ன ‘நடக்குறதே வேற என்டு‘ நினைக்கிறீங்கள்… இதெல்லாம் போகப் போகப் பழகிடும் என்டதைத்தான் நடக்குறது வேற என்டு சொல்லுறது …… நாங்கள் எப்புடி அடிச்சாலும் அரசாங்கத்தோட நல்லிணக்கமா இருக்கத்தான் போறம் என்டு எங்டக தேசியத்தலைவர் சம்மந்தனே சொல்லிப் போட்டார். முந்தின தேசியத்தலைவர் சொன்னதுக்கு கட்டுப்பட்ட நீங்கள், அதே போல உங்களால தெரிவு செய்யப்பட்ட தேசியத்தலைவருக்கும் கட்டுப்படாமல் இருக்ககூடாது.

அப்புறம் என்ன ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கிற உங்கட உடம்பிற்கு உங்கட அம்மா அல்லது லவ்வரைக் கொண்டு ஒத்தடம் போட்டுவிட்டு பேசாமல் பறையாமல் கம்பசுக்கு கிளம்பிப் போய் படிக்கிற வேலையை மட்டும் பாருங்கோ…

‘சிங்கம் களம் இறங்கிடிச்சுது‘ என்று ஊடக நாதாரிகள் முகப்புத்த வீரர்கள் உசுப்பேத்துவாங்களப்பா… நம்பிடாதீங்க

உண்மையில் உங்களுக்குத்தான் அடிவிழுந்தது. ஆகவே உங்களுக்குதான் கிண்ணம் தரவேணும் என்டு நினைக்காதேங்கோ…

இன்னொரு விசயம்.. இது யாழ்ப்பாண கம்பசில படிக்கிற பொடியலிட அப்பா அம்மாவுக்கான அறிவுறுத்தல்…

இயக்கம் வன்னியில கட்டாய ஆள் சேர்ப்பு செய்யுது என்டு 16, 17 வயதுப் பொடியல் பெட்டைகளுக்கு எல்லாம் கலியாணம் கட்டி வைச்சு உங்கட பிள்ளைகளைப் பாதுகாத்த ‘ரெக்னீக்க‘ இப்பவும் கையாளுங்கோ.

பொடியன் யாழ்ப்பாண கம்பசுக்கு தெரிவாகிட்டான் என்டால் ‘சீதனம் குறைஞ்சாலும் பறவாயில்லை‘. ஒரு பெட்டையை பிடித்து உடனே கால்கட்டு கட்டி விடுங்கள். அப்புறம் என்ன தம்பிக்கு வேற எந்த நினைப்பும் வராது.

இன்னுமொரு சிரிப்பான விசயம்…..

உங்களப் போல நாடி நரம்பெல்லாம் தமிழ்த்தேசிய உணர்ச்சி பொங்க ‘கம்பசில கெம்பி‘ எழும்பினவங்கள் எல்லாம் இப்ப அரசாங்க உத்தியோகத்தில ‘புறோக்கிறாம் அசிஸ்டன்டா‘ இருந்து கொண்டு எவ்வளவு சமத்தா வேலை செய்யிறாங்கள் என்டு பாருங்கோ.. எந்த ‘பகல்டி‘ என்டு பாரபட்சம் பாராமல் எல்லாருக்கும் ஒரே வேலையைக் கொடுத்து அரசாங்கம் அவங்களுக்குள்ள ஐக்கியத்தை ஏற்படுத்தி இருக்குது தெரியுமோ?

ஏதாவது அரசாங்க ஒப்பீசுல வேலைக்குச் சேர்ந்தாப் பிறகு நான் ‘சயன்ஸ் பக்கல்டியில படிச்சனான்‘ என்டு நீ சொல்லிப்பாரு… அந்த ஒப்பீசில ஓ.ல் பாஸ் பண்ணிப் போட்டு கிளாக் எக்சாம் எடுத்து கிளாக்கா இருந்து ‘ஏஓ‘வா வந்தவன் உனக்கு ‘பைல்‘ கட்டுற வேலையை தரும் போதுதான் நீ வாழ்க்கை என்றால் என்ன என்று உணருவாய்…….

எங்கட தமிழர்களும் இப்படி விரக்தியில் இருக்கிறார்கள்… இப்படியான பாட்டியைப் போல இருப்பவர்கள் யாராவது இருந்தால் கட்டிப்பிடித்து கொஞ்சிப் போட்டுப் போங்கள்.

நன்றி
இப்படிக்கு
அரச ஒட்டுண்ணி