பலாலியில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளது – மாவை சேனாதிராசா ?

விக்கியாரின் பேரவை, புதுவருட வாழ்த்துகள் இவைகளுக்கு போட்டியாக நேற்று இன்னும் ஒரு விடையமும் இங்கே உலாவிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் பலாலியில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளதாக மாவை சேனாதிராசா கூறியதாகவே அந்த செய்தி உலவியது. இந்த செய்தி உண்மையா என்பதைவிட இந்த விமானநிலையத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் எனறு சிலர் பெயர் கண்டுபிடிக்கும் முயறசிகளிலும் இறங்கிவிட்டனர்.
முதலில் விமான நிலையம் அமையட்டும் அதன் பின்பு பெயரை பற்றி சிந்திப்போம்.

இந்த செய்தி உணமையாக இருந்தால் விக்கியாரின் பேரவை அல்லோல கல்கோலங்களின் இருந்து யாழ்ப்பாணத்து சனங்களையும் ஊடகங்களையும் டைவேட் பண்ணிவிட மாவையார் அவிட்டு விட்ட கதை போன்றுதான் உள்ளது இந்த விமானநிலைய ஸ்டோரி.

BIA யிலேயே சனம்புலக்கம் குறைஞ்சு போட்டுது உதுக்குள்ள இன்னுமொரு எயர்போட்டு தேவையே என்டு மகிந்த மாமாவின்ட எயர்போட்டுக்குள்ள நெல்லை கொண்டு போய் ஸடோர் பண்ணின ரணில் அங்கிள்தான் உந்த பலாலில இண்டெர்நஷனல் எயர்போட்டு கட்ட ஓக்கே பண்ணினவராம். கட்டி முடிஞ்சாப்பிறகு சனங்கள் வாரதில்லை என்டு வெங்காயத்தை கொட்டிவைக்காமல் இருந்தால் ஓக்கேதான்.

திரும்பவும் பெயர் மேட்டருக்கு வருவோம்

” பலாலி சர்வதேச விமான நிலையம்” என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.

BIA போன்று இது PIA. ஆக இருக்கும்.

அப்போதுதான் நமது மேதகு தமிழ் தேசிய அரசியல்வாதிகள் P க்கு பிரபாகரன் என்றும் அர்த்தம் கொள்ளலாம் என்று நினைத்து,,,, நினைத்து சிலாகித்து போவார்கள்.

(Rajh Selvapathi)