பிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா

டக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன்! ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.

தமிழனுக்கு விடிவு கிடைக்க கிழக்கு மக்களாகிய நாங்களும் உதவுவோம் நீங்கள் நினைப்பதை போன்று நாம் மக்களால் தூக்கி எறியப்பட்டவர்களில்லை எங்களைப் போன்ற துணிந்தவர்கள் கிழக்குமாகாணத்திற்கு தேவை அது எங்களுடை மக்களுக்கு நன்கு தெரியும்.

என்னை துரோகி என்பதற்கு வெட்கமில்லையா உங்களுக்கு. இதே வாயால்தான் முன்பு சுரேஸ்பிறேமச்சந்திரனை துரோகி என்றீர்கள் இதையபோல் சித்தாத்தரை துரோகி என்றீர்கள் அவர்களின் புத்திசாதுரியமாக செயற்பாடால் புலிகளால் கொல்லமுடியாமல் போய்விட்டது அல்லது அவர்களையும் துரோகியென அகராதியில் எழுதிவைத்திருப்பீர்கள் இன்னும் புலி புலியென புலம்பாதீர்கள் பேரவையில் இருக்கின்றவர்களின் அனைத்து தலைவர்களையும் கொலை செய்த பெருமைக்குரியவர் பிரபாகரன் ஏன் குமார் பொன்னம்பலத்தைகூட அவர்கள்தான் கொன்றார்கள்,

போராளிகள் அமைப்பென்று கடந்ததேர்தலில் இறங்கிய முன்னைநாள் போராளிகளை யாழ் மக்கள் ஏன் தூக்கி எறிந்தார்கள் போர் என்றபேரில் அவ்வளவு கொடுமைகளை மக்கள் அனுபவித்துவிட்டார்கள் ஏன் நீங்கள் இதைப்பற்றி பேசுவதில்லை இதைய விடையம் மட்டக்களப்பில் நடந்திருந்தால் மட்டக்களப்பான் துரோகிகள் அதுதான் அவர்கள் போராளிகள் அமைப்பிற்கு வாக்களிக்கவில்லை என்று கூறியிருப்பீர்கள்.

இன்றும் கிழக்குத் தமிழன் தன்மானத்தோடு தமிழனாகத்தான் இருக்கின்றான் கடந்த தேர்தலில் நாங்கள் அனைவரும் சேர்ந்து கிழக்கில் தமிழர்களையே வெல்லவைத்தோம் நீங்கள் தமிழ் தமிழ் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி சிங்கள கட்சில் கேட்ட விஜயகலாவை வெல்லவைத்தீர்கள் அங்கயனுக்கு வாக்களித்தீர்கள் அப்ப எங்கடா உங்கட தமிழ் உணர்வு முதலில் உங்கட ஊத்தைகளை தேய்க்க பாருங்கள் இதெல்லாம் உங்களுக்கு துரோகமாக தெரியாதே சிவபெருமான் மாறுவேடத்தில் வந்தாலும் அவரையும் துரோகி என கூறி பிழைப்பு நடத்த கூடியவர்கள்தான் நீங்கள்.

(முரளி விநா முகப்புத்தகத்திலிருந்து)