புதிய தமிழ்மக்கள் பேரவை

வடக்கு முதலமைச்சரின் புதிய தமிழ்மக்கள் பேரவை தமது மாகாணத்தில் வாழும் மக்களை பற்றியும் அவர்களின் அன்றாட பிரச்சினைகளை பற்றியும் கதைப்பதாக தெரியவில்லை. ஐ.நா வை பற்றியும் ரணில் அரசாங்கத்தையும் அதற்கு துனைபோகும் த.தே.கூ வின் தலைமையையும் குறிவைக்கின்றதாகவே உள்ளது.

இதனை சிலரின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது. மேலும் குழப்பங்களையும் பிளவுகளையுமே உருவாக்கி போருக்கு பின்னர் அடித்தட்டு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து அனைவரினதும் கவணத்தையும் திசைதிருப்பவே இது உதவகூடும் . தேர்தல் வந்தால் இதன் உண்மையான முகம் வெளிப்படலாம்.

இது தமிழ் மக்களின் துறைசார் நிபுணர்களின் கட்டமைப்பு என்று கூறவும் முடியாது . ஏனென்றால் அடிமட்ட மக்களின் வாழ்வியலை அறிந்திராதவர்களே இங்கே அங்கம்வகிக்கின்றனர்.

வேண்டுமென்றால் இந்த பேரவையை முதலமைச்சர் தனது துறைசார் ஆலோசனை சபையாகவே உருவாக்கியிருக்கலாம்.

இந்த அமைப்பு த.தே.கூவின் தலைமைத்துவதத்தை எதிர்கின்ற அல்லது அதனை கைப்பற்றுகின்ற அல்லது அதற்கு சவால்விடுகின்ற நோக்கிலானதாகவே மாறும் என்றே தோன்றுகின்றது. இதன் செயற்பாடுகள் த.தே.கூ மையப்படுத்தியதாகவே அல்லது விமர்சன நோக்கிலாகவே அமையலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

(Rajh Selvapathi)