வட மாகாண சபை முதல்வர்! எதிர்க்கட்சி தலைவர்! மோதல்+காதல்

(மாதவன் சஞ்சயன்)

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு என ஒருவன் கூறியது போல் பதில் கூறுகிறார் வட முதல்வர் என, எதிர்க்கட்சி தலைவர் குறை கூறும் நிலையில் இருக்கிறது முதல்வர் செயல். அண்மையில் ஆங்கில இணையத்தில் வடக்கு மாகாண சபையின் செயல்திறன் இன்மை பற்றி அறிக்கை வெளியிட்ட திரு தவராசா தான் முன்வைத்த மேலே உள்ள கேள்விகளை முதல்வரிடம் கேட்ட போது, முதல்வர் ஐநா வின் வதிவிட பிரதிநிதியை சாடினாரே தவிர, கேட்ட கேள்விக்கு ஏற்ற பதிலை அவர் தரவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் பற்றி அறிய ஏற்கனவே உள்ளே நடந்தவை என்ன என விசாரித்தபோது முதல்வரின் செயலாமை பற்றி தெரிய வந்தது. ஆமை புகுந்தவீடு உருப்பாடாது என்பர். வட மாகாண சபையில் இயலாமை, முயலாமை, செயலாமை என பல ஆமைகள் புகுந்து விட்டன.

The question I raised was whether the Resident Coordinator of the UN sent him a letter dated 28.08.2015 inter-alia stating as follows:
1. You had recommended a person as an advisor to the Joined Needs Assessment (JNA), for which they have advised you that canvassing for a pre-selected candidate is untenable. They have also stated that you have pursued the central Government approval for the proposed special advisor.
2. You had urged the UN office to advocate with the Government to enable equal partnership with NPC in the JNA, for which they have advised you to directly communicate with the Government.
3. The UN has offered to arrange for you and your Board of Ministers a comprehensive briefing on the JNA; unfortunately you have not responded to their request.
4. With regard to the Peace Building Fund the UN has advised you to convey all your concerns and comments to the Ministry of Foreign Affairs.
5. The UN has pointed out their strong disagreement with your comment that the UN is not being sensitive to the needs of conflict affected people.
I also raised the issue that if the contents of the letter were true, why is that the Chief Minister has made such a blunder which led the UN Resident Coordinator to write a letter offending him. CM’s reply to my question was akin to a Tamil proverb. “When a person was asked the direction to Vaddukkoddai his reply was that two areca nuts for a cent”.

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு என ஒருவன் கூறியது போல் பதில் கூறுகிறார் வட முதல்வர் என, எதிர்க்கட்சி தலைவர் குறை கூறும் நிலையில் இருக்கிறது முதல்வர் செயல். அண்மையில் ஆங்கில இணையத்தில் வடக்கு மாகாண சபையின் செயல்திறன் இன்மை பற்றி அறிக்கை வெளியிட்ட திரு தவராசா தான் முன்வைத்த மேலே உள்ள கேள்விகளை முதல்வரிடம் கேட்ட போது, முதல்வர் ஐநா வின் வதிவிட பிரதிநிதியை சாடினாரே தவிர, கேட்ட கேள்விக்கு ஏற்ற பதிலை அவர் தரவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் பற்றி அறிய ஏற்கனவே உள்ளே நடந்தவை என்ன என விசாரித்தபோது முதல்வரின் செயலாமை பற்றி தெரிய வந்தது. ஆமை புகுந்தவீடு உருப்பாடாது என்பர். வட மாகாண சபையில் இயலாமை, முயலாமை, செயலாமை என பல ஆமைகள் புகுந்து விட்டன.

பகிரப்பட்ட 37 அதிகாரங்களை நடைமுறைப்படுத்த இயலாமை, அவற்றுக்கு நியதிசட்டங்களை உருவாக்க முயலாமை, மாற்று வழி சொல்பவர்கள் கூறும் விடயங்களை செயல்ப்படுத்தாமை, என மூன்று ஆமைகளின் மொத்த உருவமான வடக்கின் முதல்வர் அதனை சுட்டிக்காட்டினால், தன்மீது பொறாமை கொண்டவர்கள் கிளப்பும் புரளி இது என்கிறார். அவருக்கு சாதகமாக வலம்புரி சங்கை ஊதுபவர் முதல்வரை வாராது வந்த மாமணியே, வந்து நீதான் ஏற்க்க வேண்டும் கூட்டணி தலைமையை என, யாரோ கொழும்பு தலைமை எம்மை தெற்கிற்க்கு விலை பேசுகிறதாம் அதை தடுக்க, வடக்கு முதல்வர் சகல கூத்தாடிகளையும் கூட்டி கூட்டமைத்து தலைமை தாங்க வேண்டுமாம். அதற்க்கு சம்மந்தி வாசுதேவ நாணயகார வின் அனுமதி பெறவேண்டாமா? முதல்வர் கூட கொழும்பில் இருந்து வட மாகாண சபைக்கு தலைமை தாங்க கூட்டிவரப்பட்டவரே.

நான் சிவனே என்று வீட்டில் இருந்தேன் என்னை கூட்டி வந்து இந்த அரசியல் சிக்கலில் மாட்டிவிட்டனர் என கூறும் முதல்வர், எண்ணித்துணிக கருமம் என்ற வள்ளுவன் குறள் படியாதவரா? அல்லது புரியாதவரா? அல்லது புரிந்தும் புரியாதவர் போல் புலம்புவரா?. வடக்கின் அரசியல் குருசேத்திர களம். இங்கு யுத்தம் உறவுகளுக்கு இடையில் தான். ஆரம்பத்தில் எல்லோரும் எதிரியுடன் மோதத்தான் புறப்பட்டனர். இடையில் தமக்குள்ள மோதி இப்போது அரசியலிலும் அதனையே தொடர்கின்றனர். யுத்த களத்தில் மாயவன்களும், சகுனிகளும் மட்டுமே நிற்க வேண்டும். வில்லை ஒடித்த விதுரருக்கு அங்கு என்ன வேலை?. ஆன்மீகம் பேச கம்பன் கழகத்தில் அல்லது அவரது குரு பிரேமானந்தாவின் விராலி மலை ஆசிரமத்தில் இருந்திருக்க வேண்டும். இரு தோணியில் கால் வைத்தால் பயணம் என்னவாகும். நீச்சலாவது தெரியவேண்டும்.

குறை கூறுவதை தவிர இதுவரை நிறைவாக செய்தது எது, என்ற எதிர்க் கட்சி தலைவர் கேட்ட எந்த கேள்விக்கும் இதுவரை உடன் பதில் அளிக்காது, அதிகாரிகளை கேட்டு சொல்வதாக கூறியே இரண்டு வருடங்களை கடத்திவிட்டார். ஆரம்பத்தில் ஆளுநர் பிரதம செயலாளருடன் மோதினார். அவர்கள் இருவரையும் மாற்றச் சொல்லி அன்று மகிந்தவிடம் கோரினார். சம்மதித்த மகிந்த பின் ஏமாற்றினார். துவங்கியது முதல்வரின் புலம்பல். நிலைமையை மாற்ற மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க திட்டம் வகுத்தனர் சில ஊக்கம் உள்ள உறுப்பினர்கள். அதற்க்கு ஆதரவு தர ஆதங்கத்தில் இருந்த அமைச்சரும் முன்வந்தார். இயற்க்கை சூழலை பற்றி அறிந்தவரான அவருக்கு, அரசியல் ஞானம் சக பாடிகளால் ஊட்டப்பட்டு நிர்வாகம் செயலூக்கம் பெற மாற்று வழி தேடினார்கள். அவர்களுக்கு கிடைத்து நல்லதொரு ஆலோசனை.

இளைப்பாறிய முன்னாள் முதல்த்தர நிர்வாக சேவை அதிகாரிகளை கொண்டு ஒரு நிழல் நிர்வாக கட்டமைப்பை முதல்வரின் தலைமையில் அமைத்து விடயங்களை கையாள்வது என முடிவெடுத்தனர். இதனை செயல்ப்படுத்த ஓடித்திரிந்தனர் ஊக்கம் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள். பல முன்நாள் அதிகாரிகள் வருமான நோக்கின்றி சேவை மனப்பான்மையில் தமது பங்களிப்பை செய்ய சம்மதம் தெரிவித்தனர். முதல்வருக்கு இருக்கும் ஆலோசகர்கள் உட்பட உள்ள 18 ஊழியர்களுள் இவர்களை உள்வாங்கி காரியங்கள் செய்யும் போது அந்த அனுபவம் வாய்ந்தவர்களின் முன்மொழிவை, பிரதம செயலாளர் தகுந்த காரணம் இன்றி தட்டிக்கழிக்க முடியாது என்பதே சூத்திரம். அரசியல் காரணங்களால் ஆளுநர் சொல்ப்படி செயல்ப்பட வேண்டிய நிலையில் இருந்த பிரதம செயலாளர், தன்னை விட சேவையில் மூத்த அனுபவம் கொண்ட நிர்வாக அதிகாரிகளின் ஆலோசனைப்படி எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற, ஆளுநரின் கட்டளையை தவிர்க்கும் சந்தர்பத்தை ஏற்படுத்த கூடியவாறு திட்டமிடப்பட்டது.

திட்டம் செயல்ப்பட முதல்வர் பக்கம் இருந்து கால தாமதம் ஏற்பட்டது. எப்படியும் மாகாண சபையை செயலூக்கம் உள்ளதாக மாற்ற வேண்டும் என ஓடித்திரிந்தவர்களுக்கு இந்த காலதாமதம் மனச்சோர்வை ஏற்ப்படுத்தியது. சேவை மனப்பான்மையில் நிர்வாகத்துக்கு தங்கள் ஆலோசனைகளை வழங்க முன்வந்த அதிகாரிகள் பலர் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆரம்பகால நிர்வாகிகள். முதல்வரின் முடிவு தாமதப்பட ஆற்றாமையில் முன்னோடிகள் தமக்குள் கூடிப்பேச, முதல்வர் மனதில் என்ன இருக்கு என்பதை அமைச்சர் கசிய விட்டார். உள்ளூர் மாடுகளை விட்டுவிட்டு சீமையில் இருந்து நல்ல கறவை மாடு ஒன்றை இறக்கும் விருப்பில் முதல்வர் இருக்கிறார் என கூறியவர், அது வேறு யாருமல்ல தேர்தல் காலத்தில் முதல்வருக்கு உதவி செய்த, முதல்வருக்கு நெருங்கிய ஒருவரான அவுஸ்ரேலிய பிரஜை என்றார்.

சேவை மனப்பான்மையில் வரும் அனுபவஸ்தர்களுக்கு உள்ளூர் பணத்தில் கணிசமான சம்பளம் போதும். ஆனால் முதல்வர் விருப்பு தெரிவின் சம்பளம் மாதம் 5 ஆயிரம் டொலர். தன்னை பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் பண்ணிய கதையாய், இங்கு சில ஆயிரம் ரூபாவுக்கு தம் சேவையை தர அனுபவஸ்தர்கள் காத்திருக்க, அவர்களிடம் பயிற்சி பெற்று பின்னாளில் நிர்வாகத்தில் உள்வாங்கப்பட கூடிய பல ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் ஊரில் இருக்க, மாதம் 7 லட்சம் சம்பளம் வாகன, வீட்டு வசதிகள் என 10 லட்சத்தை தாண்டும் நியமனத்தை செய்விக்க, அதுவரை சொன்ன சொல் தவறிய மகிந்த எனக் கூறி, மத்திய அரசு ஒரு கையால் கொடுத்ததை மறுகையால் பறிக்கிறது என்று அதனை அணுகாமல் இருந்தவர் தன் விருப்பு தெரிவின் நியமனத்துக்காக்க யார் மூலமோ அணுகினார்.

அது தேர்தல் காலம் என்பதால் சம்மதித்த உயர்பீடம், அந்த நபருக்கு இரட்டை பிரஜா உரிமை இருந்தால் போதும் மற்றதை பின்பு பார்துக்கொள்ளலாம் என கூறப்பட்டும் முதல்வர் விரும்பாத கால தாமதம் ஏற்ப்பட்டதால், வழி முறைகளை மீறி ஐநா வதிவிட அதிகாரியின் அனுசரணைக்கு அழைப்பு விட்டு, அதற்க்கு கிடைத்த பதிலைத்தான் கேள்வியாக்கி எதிர்க் கட்சி தலைவர் வட மாகாண சாபைபில் கேட்க, வழமை போலவே விடயதானத்துக்கு பதில் கூறாது ஐநா வதிவிட அதிகாரி மீது குறைபாடி, தான் தயாரித்துவந்த அறிக்கையை வசித்து அதில் ஐநா தமிழ் மக்களை ஏமாற்றியதாக கூறி, எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் வழமை போல் வட்டுக்கோட்டைக்கு வழி கேட்க துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு என்றார்.
-நீட்சி 2ல்-