வேட்டை ஆரம்பம்! புலிகளுக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கினார்! மஹிந்தவை சூழும் அபாய மேகம்!

Defusing momentum என்றொரு தந்திரம் உண்டு. வன்முறைகள் வெடிக்க கூடும் அல்லது எதிர் வினைகள் பலமாயிருக்கும் என்று அஞ்சும் சந்தர்ப்பங்களின் கையாளப்படும் ஒரு யுக்தியே இதுவாகும். அதற்காக ஆரம்ப கட்ட நகர்வுகள் சிலதை பரீட்சார்த்தம் போல செய்து பார்த்து sense the pulse என்ற signal ஒழுங்காக கிடைக்குமிடத்து operation தொடரும். அந்த ராஜ தந்திரங்களைத்தான் அரசு தற்போது கையாள்கிறது! போரை வெற்றி கொண்ட மாயையில் ஒரு தசாப்த காலம் பெரும்பான்மை மக்களின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த மஹிந்த ராஜபக்‌ஷவை over the night இல் சிறையில் அடைப்பதென்பது பாரிய எதிர்வினைகளை உண்டாக்க வல்லதென அரசியல் பரப்பில் ஓர் அச்சமுண்டு. கிரீஸ் பூதம் தொடங்கி அழுத்கம வரையிலான நிகழ்வுகளே முஸ்லிம்களுக்குள் மஹிந்த விரோதப்போக்கை வளர்த்துவிட்டது. தமிழர்களுக்கு மஹிந்தவின் மீதான வெறுப்புக்கு வேறு பல அரசியல் காரணங்கள் உண்டு.

ஆனால் பெரும்பான்மை சிங்களவர்களுக்கு இன்றும் அவர் ஹீரோவாகவே இருக்கிறார். அவரது ஊழல் மோசடிகள், தேசத்தை சுரண்டியமை பற்றியெல்லாம் பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பான்மையினர் இன்னும் கவலை கொண்டதாக தெரியவில்லை. ஆகவே இவ்வாறான பின்புலமுள்ள அரசியல் தலைவரை மடக்கிப்பிடிப்பதற்கு , மக்கள் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு வலிய காரணத்தினை முன்வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலும் அரசு உள்ளது! சாதாரண நீதிமன்ற விசாரணைகளில் உள்ள தாமதம் , குற்றச்சாட்டுகளின் தன்மை, சாட்சிகள், ஆதாரங்கள் என்ற வழமையான விசாரணைகளின் போக்கு என்பனவெல்லாம் மஹிந்தவை மக்கள் எதிர்பார்க்கும் அவசரத்திற்கு கைது செய்து கூண்டில் அடைத்து விட ஒருபோதும் ஒவ்வாதவை!

ஆகவேதான் தேசத்துரோக குற்றச்சாட்டொன்றில் அவரை மடக்கிவிட புதிய உபாயம் ஒன்று வகுக்கப்படுகிறது. அதுதான் ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் வாக்களிப்பை தடுக்க மஹிந்த புலிகளுக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கினார் என்ற குற்றச்சாட்டை நிறுவுதலாகும்! இதன் மூலம் முதலாவதாக FCID விசாரணைகளை முன்னெடுத்து துரித கதியில் மஹிந்தவை கைது செய்துவிட இயலும் என அரசு நம்புகிறது. இரண்டாவதாக, இந்த குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் புலிகளை போரில் வென்ற தேசத்தலைவன் என்ற மாயை தகர்க்கப்பட்டு, மஹிந்த ஒரு தேசத்துரோகி என அவரது ஆதரவாளர்களே உணரத்தொடங்கும் ஒரு நிலையினை உருவாக்கிவிட முடியும் என்ற அரசியல் காரணங்களும் உண்டு.

ஆகவேதான் சர்வதேச ரீதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான எமில் காந்தனை சரணடையச்செய்வதற்கான முயற்சிகளில் அரசு இறங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளதை இன்றைய செய்திகள் கூறுகின்றன. பல்வேறு குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு வந்த எமில்காந்தன், வடக்கில் வாக்களிப்பை தடுக்க மஹிந்த புலிகளுக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கிய போது அதற்கு தரகராக செயற்பட்டாரென்ற பிரதான குற்றச்சாட்டுக்கும் இலக்கானவர். எமில் காந்தன் சரண்டையும் போது, அவரது குற்றங்களுக்கான தண்டனைகள் தொடர்பில் ஒரு வகை compromise இற்கு வருவதன் மூலம் அவரை அரசதரப்பு சாட்சியாகவும் மாற்றி ராஜபக்‌ஷவுக்கான ஆப்பினை செருகி விட தகுந்த சந்தர்ப்பமாய் அமையுமென அரசு காத்திருக்கிறது.

இலங்கை அரசியல் பரப்பில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் அதிர்வுகள் பாரிய சுனாமிகளை தோற்றுவித்து விடக்கூடும் என அரசும் பொது மக்களும் ஏலவே அஞ்சிய போதும், அரசின் தந்திரோபாய நகர்வுகள் காரணமாக அமைதியான நீரோட்டத்தில் இலைகள் உதிர்வது போன்றதான சலனங்களையே அண்மைய கைதுகள் ஏற்படுத்தியுள்ளன! ஆகவே இறுதி இலக்கை நோக்கிய அரசின் பயணம் எதிர்பார்த்த கடினத்தை விட சுலபமாகியுள்ளதைத்தான் இப்போதைய போக்குகள் கோடி காட்டுகின்றன. நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லவை நடக்கட்டும்.

(முஜீப் இப்ராஹீம்)