தகனமா? புதைகுழியா? சிறந்தது

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
ஆரம்பத்தில் சுகாதார திணைக்களம் விடுத்த சுற்றறிக்கையின் பிரகாரம் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்த அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படும் உடல்களை புதைக்கவும் அல்லது எரிக்கவும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாவது நோயாளியின் இறப்பினை தொடர்ந்து 1/4/2020 இல் ஏற்கனவே இருந்த சுற்றறிக்கை முற்றாக மாற்றி அமைக்கப்பட்டு அவ்வாறான ஓர் உடலை எரித்து தகனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது QUARANTINE AND PREVENTION OF DISEASES என்ற சட்டத்தின் பிரகாரம் ஆகும். இச்சட்டதின் பிரகாரம் சுகாதார அமைச்சின் இயக்குனர் (DGHS ) அவர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சடலத்தினை புதைப்பதினால் கொரோனா வைரசு மேலும் பரவ சாத்தியம் உண்டா?
கொரோனா வைரசு 2019 ம் ஆண்டின் இறுதிப்குதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது, இக்குறுகிய கால இடைவேளையில் இவ்வைரசு சம்பந்தமான சகல தகவல்களும் ஆராய்ச்சிகள் மூலம் பெறப்படவில்லை. எனினும் கொரோனா குடும்ப வைரசுக்களின் இயல்புகள் போன்றவை ஏற்கனவே உள்ள தெளிவான தகவல்கள் ஆகும். தற்பொழுது உள்ள விஞ்ஞான அறிவின் பிரகாரம் இவ்வாறு கொரோனாவினால் இறந்த ஒருவரின் உடலினை புதைப்பதினால் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிப்பதில்லை.

புதைப்பதினால் கொரோனா வைரசு நிலத்தடி நீரில் சென்று குடிநீர் மூலம் பரவுமா?
இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தில் உடலானது 8 அல்லது 10 அடி ஆழமான குழியிலே புதைக்கப்படும். மேலும் இரு தடித்த பொலித்தின் இனால் ஆன உறைகள் (more than 150µm and zipped seal body bag) மூலம் உடல் முற்றாக மூடப்படும். இதனால் உயிர்ப்பான நிலையில் வைரசுவானது நிலத்தடி நீரினை அடையாது. ஓரிரு மாதங்களில் உடலின் முக்கிய பகுதிகள் அழிவடைந்து விடும். அதன் பின்னரே பொலித்தீன் பைகள் உக்கி அழிவடைய ஆரம்பிக்கும். இவ்வாறே உடலினை சுற்றி பொலித்தீன் பைகள் போடப்படுவதினால் வழமைக்கு மாறாக அதிக வேகத்தில் உடலமானது உக்கி அழிவடையும். இக்காலப்பகுதியில் இறந்தவரின் உடலில் இருக்கும் வைரசுவும் இறந்து விடும். பொதுவாக இந்த வைரசுவானது 4 மணித்தியாலங்கள் வரை இறந்தவரின் உடலில் உயிர்ப்பான நிலையில் இருக்கும். வைரசுக்கள் தொடர்ந்து பிரிந்து பெருகி உயிர் வாழ உயிர் நிலையில் உள்ள ஓர் கலம் தேவை. எனினும் தற்போதைய ஆய்வுகளின் பிரகாரம் இவ்வைரசுக்கள் உலோகம் போன்றவற்றின் மேற்பரப்பில் 72 மணித்தியாலங்கள் வாழும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனினும் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களின் கருத்தின்படி புதைத்தல் மூலம் நிலத்தடி நீர் மாசுபடும் என்பதினை கூறவில்லை.

wp-15841865674796858912672646381447.jpg

உடற் கூராய்வு பரிசோதனைகள் ஆபத்தானதா?
இவ்வைரசுவின் தொற்று ஏற்படும் காரணமாக இந்த நோயினால் இறந்தவர்களுக்கும் அவ்வாறு சந்தேக படுபவர்களுக்கு சுகாதார சேவை ஊழியர்களின் நலன் கருதி பொதுவாக செய்யப்படுவதில்லை. கொரோனா வைரசுவானது நோயாளி தும்மும் பொழுதும் இருமும் பொழுதும் அவரின் சுவாச தொகுதியில் உள்ள வைரசு ஆனது துணிக்கைகள் மூலம் மற்றையவரை சென்றடையும் ஆனால் உடற்கு கூராய்வு பரிசோதனையின் பொழுது இறந்த உடலில் இருந்து இவ்வாறு தும்மல் போன்ற போன்ற செயற்பாடுகள் நடைபெறாது எனினும் மின்சாரம் வாள் போன்றவற்றில் இருந்து துகள்கள் பறப்பதினாலும், இவ்வாறு வளியில் வைரசு ஆனது உயிர்ப்பாக காணப்படும் தன்மை இருப்பதினாலும், உடலின் மேற்பரப்பில் இருந்து தொடுகை மூலம் நேரடித்தொற்று ஏற்பட சாத்தியம் இருப்பதினாலும் உடற் கூராய்வு ஆபத்தானதாக இருக்கும்.

உலகம் இவ்வாறான ஆபத்தான நிலையில் உள்ள பொழுது கட்டாயம் எரித்தல்/ புதைத்தல் என்ற வேறுபாடு தேவை தானா?
இன்றைய பொழுதில் உலக வல்லரசுகள் நோயின் தாக்கத்தினால் ஆடிபோயிருக்கும் நிலையில் பலரினதும் கேள்வி ஏன் சிலர் மட்டும் புதைக்கவேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர், உடலினை எரித்தால் என்ன நடந்து விடப்போகின்றது. வேறு சிலரின் கருத்து மனிதன் இறந்து விட்டால் அது சடலம் தானே அதன் பிறகு எரித்தென்ன புதைத்தென்ன.

தற்போதைய கால கட்டம் ஓர் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஓர் நெருக்கடியான அனர்த்தம் ஆகும். அதிஷ்டவசமாக ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கை கையாளக்கூடிய எண்ணிக்கையில் தான் அமைந்துள்ளன. இறப்புக்களின் எண்ணிக்கை கையாள முடியாத எண்ணிக்கையினை தாண்டி செல்லும் பொழுது நாம் எல்லோரும் நாட்டின் நன்மை கருதியும் சக பொதுமக்களின் நன்மை கருதியும் அரசாங்கத்தின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். இலங்கையில் அதிஷ்டவசமாக அந்த நிலை இன்னமும் ஏற்படவில்லை.

ஒருவரின் மத நம்பிக்கை என்பது அவர் பின்பற்றும் மதங்களுக்கு ஏற்ப வேறுபடும், இதில் முக்கிய விடயம் என்னவென்றால் அந்த நம்பிக்கைக்கு அடிப்படையில் ஓர் விஞ்ஞான ரீதியான அல்லது தர்க்க ரீதியான அடிப்படை ஒன்று இருக்கும். பல சந்தர்ப்பங்களில் மேற்குறித்த ஒன்றுமே இருக்காது. இவ்வாறான நிலையில் ஏன் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் என்ன என்ற ரீதியில் வாதிடுவது ஓர் முட்டாள் தனமான செயற்பாடாகவே அமையும். மேலும் மத அறிஞர்கள் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலையில் தமது மத சம்பந்தமான அறிவின் ஊடாக புதைத்தலுக்கு பிரதியீடாக என்ன செய்யலாம் என்பது பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டுமா?
உலக சுகாதார நிறுவனம் (WHO) அவ்வவ்போது தனது உறுப்பு நாடுகளுக்கு இவ்வாறு வழிகாட்டுதல்களை வெளிவிடும். அவை உண்மையிலேயே வழிகாட்டுதல்கள் தான் மாறாக சட்டம் அல்ல. உறுப்பு நாடுகள் அதனை தமது தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம் அல்லது முற்றாகவே பின்பற்றாமல் விடலாம் அல்லது தமது நாட்டிற்கு என தனித்துவமான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தலாம்.

சுகாதார அல்லது வைத்திய அதிகாரிகள் ஏன் இறந்தவரின் உடலினை உறவினரிடம் கையளிக்க பின்னிற்கின்றனர்?
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்த ஒருவரின் உடலில் அதிகளவு Covid 19 வைரசுக்கள் (high virus load) காணப்படும் இதன் காரணமாக மற்றவர்கள் இலகுவில் தொற்றுக்கு உள்ளவர் மேலும் இறந்தவரின் உடலினை குறித்த கால இடைவெளியினுள் (less than 12 hours ) மேலும் மத அறிஞர்கள் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலையில் தமது மத சம்பந்தமான அறிவின் ஊடாக புதைத்தலுக்கு பிரதியீடாக என்ன செய்யலாம் என்பது பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

இது தவிர இலங்கையில் மரண சடங்கினை கொண்டு நடத்துபவர்களுக்கு (funeral directors) என விசேட சட்ட மூலங்கள் எதுவும் இல்லை, இதன் காரணமாக கையளிக்கப்பட்ட உடலுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிய முடியாது. மேலும் உறவினர்களினால் சீல் செய்யப்பட்ட உடல் சூழலுக்கு வெளிக்காட்டிடப்படும் சந்தர்ப்பமும் உண்டு.