தீவுப்பகுதியை வளமாக்கும் கண்டல் காடுகள் – ஒரு கடற்படை அதிகாரியின் விடா முயற்சி

கரையோரப் பகுதிகளை ஆழிப் பேரலை போன்ற பேரழிவுகளிலிருந்து காத்தல், மண்ணரிப்பைத் தடுத்தல் முதல் அருகே வாழும் மனிதருக்குத் தேவையான கடலுணவு மற்றும் எரிபொருட் தேவைகளை வழங்கிவரும் இயற்கையின் கொடையான கண்டல் தாவரங்கள்கடந்த காலங்களில் இலங்கையில் பேரழிவுக்குட்பட்டு வந்தன. போர்க்காலத்தில் பெரும்பாலானவர்கள் தமது விறகுத் தேவைக்கு இத் தாவரங்களையே பெரிதும் பயன்படுத்தினார்கள்.