16 குளங்கள் கட்டிய கதை

தற்போது 84 வயதாகும் இந்த கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்ப்பவரான காமேகௌடாவுக்கு இந்த நிலை மிகவும் வருத்தத்தை அளித்தது. ஆடு மாடுகளுக்கும் பறவைகளுக்கும் கூட நீர் இல்லாத நிலையை மாற்ற அவர் முடிவு செய்தார். அதனால் அங்கு ஒரு குளம் ஒன்றை அமைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனது சேமிப்பு அனைத்தையும் செலவு செய்ய ஆரம்பித்தார்.

இதற்காக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு நிலத்தில் இவ்வாறு குளம் வெட்டுவது சட்ட விரோதமானது என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் காமேகௌடா எதையும் பொருட்படுத்தாமல் தனது பணியை தொட்ர்ந்தார். அவர் குளம் வெட்டிய இடத்தில் சுமார் 5 அல்லது ஆறு அடி ஆழத்திலேயே நீர் இருந்தது இவருக்கு மேலும் ஆர்வத்தை உண்டாக்கியது.

தனது ஆடுகளை விற்று விட்டு அதன் மூலம் குளம் அமைக்க தேவையான மண்வெட்டி உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி மேலும் குளம் அமைக்க ஆரம்பித்துள்ளார். முதல் குளம் அமைக்க இவருக்கு ஆறு மாதங்கள் ஆகி உள்ளது. அதன் பிறகு மீண்டும் பணம் சேர்த்து அடுத்த குளம் அமைக்க ஆரம்பித்துள்ளார். இவ்வாறு 16 குளங்கள் அமைத்துள்ளார்.

இந்தக் குளங்களில் ஒரு குளத்தில் நீர் நிரம்பினால் அதன் உபரி நீர் மற்றொரு குளத்துக்கு செல்லுமாறு காமேகௌடா புதிய தொழில் நுட்பத்துடன் அமைத்துள்ளார். அதே நேரத்தில் இவர் கல்வி அறிவு இல்லாதவர் என்பது குறிப்பிடத் தக்கது. அனைத்து குளங்களையும் ஒன்றோடு ஒன்று இணைத்து அமைத்துள்ளார்.

காமேகௌடாவின் சேவையை பாராட்டி இவருக்கு மத்திய மாநில அரசுகள் பல விருதுகள் அளித்துள்ளன. காமேகௌடா அதைப் பற்றி அதிகம் பெருமை கொள்ளாமல் தனது கிராமம் இப்போது பசுமையாக இருப்பதே தமக்கு கிடைத்த மிகப் பெரிய விருது என தெரிவித்துள்ளார்.