இந்திய சுதந்திரம்……

இது இந்தியாவின்
இன்றைய யதார்த்தம்
ஒரு கொடியிற்குள்
வசதிகளும் வாய்ப்புகளும்
பல கொடிகளுக்குள்
வறுமையும் வாய்பற்றவர்களும்

வல்லரசுக் கனவுகளை
கனவுகளாக காட்டும்
எங்கள் முகங்கள்
நாம் நம்பிக்கை
இழக்கவில்லை
இரு கரங்களிலும்
(நா)நம் இந்தியாவை
சுமக்கின்றோம்
எம் வறுமைதான்
தீர்ந்தபாடில்லை

முடி வெட்ட
முடியவில்லை
கொரனா என்ற கோதாரி
முடி திருத்துபவரின்
கோடிக்குள்ளை
என்னிடம் கொடுக்கவும்
காசு இல்லை
மிரண்டுது ஏழையை
கொரனா கோதாரி

தொழில் இன்றி அவரும்
எம்மைப் போல்
சோத்துக்கு அல்லாடும்
ஏழைத்தான்
இன்று அதுதான்
‘இந்துவத்துவா’ இந்தியா

இந்திய சுதந்திரம்
கடந்து வந்த பாதை
எழுபதுக் மேல்
சுதந்திரத்திற்காய்
போராடிவர்கள் நாம்
எல்லோரும்

கிடைத்த சுதந்திரம்
என்னமோ ஒரு
கொடியினருக்குத்தான்
இன்று கொடிகள்
கொடிக்கம்பங்கள் ஆகின
கட்சி என்றும்
மதம் என்றும்
மொழி என்றும்

வறுமை நீக்க
வாழ்வை
உறுதி செய்ய
சமத்துவத்தை
பெற்றுத் தர
ஒரு கொடியையும்
காணோம் வெறும்
கொடிக் கம்பங்களே
நிற்கின்றன தனியாக
எம்மைப் போல்