இயற்கை வளம், பல்லுயிர் பாதுகாப்பு: மரம் நடுவது எப்படி – தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்.

மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள்.