உலக ஈரநிலங்கள் தினம் ( World Wetlands Day) 02.02.2021.

1971ஆம் ஆண்டு மாசி மாதம் 2ஆம் திகதி ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 18 நாடுகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உலக ஈர நிலங்களை பாதுகாக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த தினத்தைத்தான் உலக ஈரநிலங்களின் விழிப்புணர்வு தினமாக கொண்ணடாப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை ஆராய்ந்த ராம்சார் அமைப்பு அவற்றில் முக்கியமானவைகள் என 1950 சதுப்பு நிலங்களை தெரிவு செய்துள்ளது. உலகில் ஏறக்குறைய 1112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் கெக்டேர் நிலப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. உலகில் 6சதவீதமாகவும் இலங்கையில் 15சதவீதமாகவும் ஈரநிலங்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் 1990ஆம் ஐப்பசி மாதம் 15ஆம் திகதி ராம்சார் மாநாடு; ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது இலங்கையில் ஆறு தளங்கள் ராம்சார் தளங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் வில்பத்து ஈரநிலம், வங்காலை சரணலாயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஈரநிலங்களை இரண்டு வகைப்படுத்தலாம்

1. உப்புநீர் ஈரநிலங்கள்

  1. நன்னீர் ஈரநிலங்கள்
    கடலுக்கும் நிலப்பகுதிக்கம் இடையே ஆழம் குறைந்த ஆண்டு முழுவதும் நீர் தேங்கி நிக்கும் நிலப்பரப்புக்களை ஈரநிலங்கள் எங்கிறோம்.
    ஏவ்வித பயன்பாட்டிற்கும் உதவாத நிலங்கள் தனே என்ற அலட்சியப்போக்கில் எல்லோரும் வாழ்ந்து வருகிறோம். இதனால் பருவம் தவறி மழை பெய்கிறது, வெள்ளச்சேதம் ஏற்படுகின்றது, கடல்சீற்றத்தால் சுனாமி போன்ற பேரலைகள் உருவாகின்றது.
    ஆனால் ஈரநிலங்கள் பேரழிவினால் ஏற்படும் ஆபத்தை தணிக்கும் சக்தி கொண்டவையாக இருக்கின்றன.
    ஈரநிலங்கள் நம்மை பாதுகாக்கவும் சுத்தமாகவும் புதிய நீர் மற்றும் காற்றோடு வைத்திருக்கின்றன. இவ் ஈரநிலங்கள்தான் அலையாத்தி காடுகளை கொண்டிருப்பதினால் கடல் நீர் உட்புகாமல் தடுக்கின்றது, மழை வெள்ளநீரை உள்வாங்கி வெள்ளசேதத்தை தடுக்கின்றது.
    அத்துடன் ஈரநிலங்கள் வெள்ளத்தின்போது கடல்பாசிகள்போல செயல்படுகின்றன, மழை மற்றும் வெள்ளநீரை சேகரித்து 1ஏக்கர் ஈரநிலத்தில் 330000 கலன் தண்ணீரை ஒரு அடி ஆழத்தில் சேமிக்க முடியும்.
    ஈரநிலங்கள் ஆயிரக்கணக்கான நீர் வாழ் மற்றும் நிலப்பரப்பு தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடத்தை வழங்குகின்றன. எமது மாறுபட்ட வனவிலங்குகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றன. அவைகள் இல்லாமல் நாம் சந்தேகத்திற்கு இடமின்றி இனங்களின் இழப்பை அனுபவிப்போம்.
    ஈரநிலங்கள் நமது பல்லுயிரியலின் பெருக்கத்தின் தாயகமாகும். ஈரநிலங்கள் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் கார்பனைச் சேமித்து பகிர்ந்தளிப்பதில் சிறப்பாக பணியாற்றுகின்றன.
    இவ் ஈரநிலங்களை பொறுபற்ற முறையில் தெருக்கள், விவசாய உற்பத்தி, இறால் மீன் இனங்கள் வளர்ப்பு, மைதானம், ஆலயங்கள், கட்டடங்கள், நில ஆக்கிரமிப்பு போன்ற பல காரணங்களினால் எமது நாட்டில் ஈரநிலங்களை பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
    இவ்வாற செயற்பாட்டால் உயிர்ச் சங்கிலி உடையும், பல்லுயிர் வளம் பாதிக்கப்படும், சூழல் சூனியமாகும் முக்கியமாக நீரை வடிகட்டி நன்னீராக மாற்றும் செயல் நின்றுபோய் நிலத்தடி நீர்வளம் நீர்த்துப்போகும்.
    இவ்வாறான ஈரநிலங்களை எந்த வகையிலும் சேதபடுத்தமால் நம் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவற்றை பாதுகாத்து பராமரிப்பது எமது ஒவ்வொருவருடைய தலையாதைய கடமையாகும்.
    தண்ணீரின்றி ஈரநிலங்கள் இருக்காது – ஈரநிலங்கள்
    இல்லாமல் தண்ணீர் இருக்காது”