அமெரிக்காவின் தூதுவராலயம் ஜெருசலேமில்

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெரு​சலேமை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும், அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலேமிற்கு மாற்றவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக வளைகுடா நாடுகள் புதிய நெருக்கடியினைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த முடிவினால் மத்திய வளைகுடா நாடுகளின் ஒற்றுமைக்கு தடை ஏற்படும் என்றும்,இதனால் வளைகுடா நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலேமிற்கு மாற்றும் நடவடிக்கை இன்னும் 6 மாதங்களில் முன்னெடுக்கப்படும் என்றும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.