‘அமைதியின்மையைத் தோற்றுவித்தவர்களை தண்டிக்கவும்’

இன்று மினுவாங்கொட பிரதேசத்துக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தப் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சில நாள்களாக எமது நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் சம்பங்களில் எமது குழந்தைகளை ஈடுபடுத்தாதீர்கள். இனவாத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கறுப்பு ஜூலையைப் போல், மீண்டும் ஒரு சம்பவம் இந்த நாட்டில் ஏற்படக் கூடாது. இதன் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஒ​ரே இனமாக அனைவரும் வாழ வெகு விரைவாக இந்த நாட்டை கட்டியெழுப்பும் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

​வெளிநாடுகளில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து நாட்டுக்காக ​சேவையாற்றுவர். ஆனால் எமது நாட்டில் அவ்வாறு இல்லை. எனவே இந்த நிலை மாற வேண்டும் என்றார்.