’இந்தியாவும், பாகிஸ்தானும் முரண்படுகின்றன’

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான நீர் ஒப்பந்தத்தின் சரத்துக்களின் கீழ், குறிப்பிட்ட மட்டத்தை தாண்டியவுடன் மேலதிக தண்ணீர் வெளியேற்றத்தை நேற்று முன்தினமிரவு பாகிஸ்தானுக்கு அறிவித்ததாகக் கூறியுள்ளது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சுட்லெய் ஆற்றிலிருந்து எதிர்பாரதவிதமாக நீரை விடுவித்தமையானது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாகவிருக்கும் நீர் ஒப்பந்தத்தை மீறும் இந்தியாவின் முயற்சியொன்றின் அங்கமென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இராஜதந்திர ரீதியாக இந்தியா பாகிஸ்தான தனிமைப்படுத்த முயல்வதாகவும், பொருளாதாரத்தை சிதைக்க முயல்வதாகவும், நீர் வளங்களை சிதைக்க முயல்வதாகவும் தெரிவித்த பாகிஸ்தானின் நீர் மற்றும் சக்தி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் முஸம்மில் ஹுஸைன், பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனத்தில் நீர் தாக்கம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு, பாகிஸ்தானும் உரிமை கோரும் காஷ்மிர் பிராந்தியத்தின் தமது பகுதியிலுள்ள பிராந்தியத்தின் சிறப்புரிமையை நீக்கும் இந்தியாவின் முடிவைத் தொடர்ந்து ஏற்கெனவே கொதிகளமாகவுள்ள அயல் நாடுகளான இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்தியாவின் முடிவுக்கு கோபமாகப் பதிலளித்த பாகிஸ்தான், போக்குவரத்து, வர்த்தகத் தொடர்புகளைத் துண்டித்ததுடன், இந்தியாவின் தூதுவரையும் வெளியேற்றிருந்தது.