இந்தியாவை தவிர்த்து பங்களாதேஷிடம் எரிபொருள் பெற நேபாளம் முயற்சி

நேபாளத்திற்கான இந்திய விநியோகப் பாதை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள நிலை யில் பங்களாதேஷில் இருந்து விமானத்தின் ஊடே எரிபொருள் பெற அந்த நாடு திட்டமிட் டுள்ளது. நேபாளத்தின் புதிய அரசியலமைப்புக் குறி த்து அதிருப்தி அடைந்திருக்கும் இந்தியா அந்நாட்டுக்கான எரிபொருள் விநியோகத்தை முடக்கி இருப்பதாக நேபாளம் குற்றம்சாட் டுகிறது. கடந்த ஒரு சில தினங்களாக நேபா ளத்தில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம் அடைந்துள்ளது.

எனினும் இந்த முடக்குதலுக்கு தாம் பொறுப்பல்ல என்று இந்தியா நிராகரித்துள் ளது. இந்நிலையில் சுமார் 200 டுவிட்டர் பயணர்கள் காத்மண்டுவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு எரிபொருள் தானம் செய்து தமது எதிர் ப்பை வெளியிட்டுள்ளனர். இந்திய தூதரம் தனது வாகனங்களுக்கு நேபாள எண் ணெய் கூட்டுத் தாபனத்திடம் எரிபொருள் கேட்டதை அடு த்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் இவ்வாறு செயற்பட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மறுபுறம் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கட்டாய மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாதிருப் பதாக நேபாள மருந்தக நிறுவனங்களும் எச்சரித்துள்ளன. இந்தியாவைத் தவிர்த்து வேறு நாட்டில் இருந்து எண் ணெய் மற்றும் பெட்ரோல் பெறுவது மிக கடினமானதாக இருக்கும் என்று நேபாள எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தீபக் பரல் குறிப்பிட்டுள்ளார். நிலத்தால் சூழப் பட்ட நேபாளத்தில் இந்தியாவை தவிர்த்து ஏiனைய எல் லைப் பகுதிகள் மலைப்பிரதேசத்தின் மோசமான பாதை களை கொண்டதாக உள்ளன.

நேபாளத்தில் கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு குறித்து இந்திய எல்லையை ஒட்டிய தெற்கின் சமவெளி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின் றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு பதலளிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தே இந்தியா விநியோகப் பாதைகளை முடக்கி இருப்பதாக நேபாளம் குறிப்பிடு கிறது.