இந்திய அரசையும் மக்களையும் நோக்கி , “போர் வேண்டாம், உட்கார்ந்து பேசுவோம்”

ஓட்டுப்பொறுக்கும் கட்சிகள் ஒருபோதும் தெருவுக்கு வந்து யுத்தம் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. எல்லாக் கட்சிகளினதும் நோக்கம் ,வரும் தேர்தலில் வெற்றிபெறுவது தான்.
அதற்கு தேசபக்தி வலுச்சேர்க்கும் என்று சங்கிகள் போலவே அவர்களும் நம்புகிறார்கள்.

தேசியவாதத்தை ,தேசப்பற்றை, தேசபக்தி என்றவில் இந்த இந்துத்துவ கூட்டம் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. “பக்திஉளவியல்” ஓட்டுப்பொறுக்கும் கட்சிகளையும், மக்களையும் பயமுறுத்தி வைத்திருக்கின்றது.

கொடிய யுத்தம் வேண்டாம் என்று மக்கள் தெருவுக்கு வராவிட்டால். கடந்த காலங்களில் போர்கள் நமக்கு தந்த படிப்பினைகளில் இருந்து எதையுமே கற்றுக்கொள்ளா தவர்கள் ஆகிவிடுவோம்.

போர் என்பதே ஒவ்வொரு தனிநபருக்கும் எதிரானதுதான்