ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஹிலாரி?

யாரிடமிருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதாக ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

அந்தவகையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளரான ஹிலாரி கிளின்டன் மறுக்கவில்லை.

கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தான் வென்றிருந்தால் எவ்வாறான ஜனாதிபதிதாகத் தான் இருந்திருப்பேன் என எல்லா நேரமும் நினைப்பதாக ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் செனட்டரான ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக் கட்சி சார்பாகப் போட்டியிடுவதற்கு ஏற்கெனவே 17 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.