ஐதேகவுக்கு தனியாக அரசை அமைக்க முடியும் – மங்கள

நேற்று இரவு(26) ஜனாதிபதி மைத்ரியை , மங்கள சமரவீர மற்றும் சில முக்கிய ஐதேக பிரமுகர்கள் சந்தித்தனர். நல்லாட்சி அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, சுதந்திரக் கட்சி செயல்படுமானால் புரிந்துணர்வு ஒப்பந்தந்தை விட்டு மைத்ரி தரப்பை வெளியேறுமாறு சந்திந்த குழுவினர் கூறியுள்ளனர்.

தவிர ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் ஒரு ஆட்சியை, ஐதேகாவால் அமைக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டிய குழுவினர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி மகிந்த தரப்போடு இணைந்து உள்ளூராட்சி தேர்தல்களில் இறங்க விரும்பின், அதற்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு செல்லுமாறு மங்கள உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும் ஐதேகவுக்கு 105 ஆசனங்கள் இருப்பதாகவும், ஐதேகவுடன் இணைந்து ஆட்சியை தொடர பலர் ஆதரவாக உள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டிய மங்கள சமரவீர, நீங்கள் செய்யப் போகும் செயல் உங்களுக்கு வாக்களித்த 62 லட்சம் மக்களுக்கு துரோகம் செய்யும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.