ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்!

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்து காத்திருக்கின்றார் தமிழ் இளைஞன் ஒருவர். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார். அதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார். இவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்க முடியும்.

இவரின் பெயர் பாஸ்கர் – வயது 38. தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை சேர்ந்தவர். பொறியியலாளராக கடமையாற்றினார். சகல கலா விற்பன்னன் என்று தமிழில் ஒரு பாராட்டு உள்ளது. இப்பாராட்டுக்கு உண்மையிலேயே தகுந்தவர். இவரின் தேடுதல் முயற்சிகள், ஆய்வுகள் ஆகியன இவரை உலகம் தழுவிய தமிழர்கள் அனைவருக்கும் தெரிய வைத்து உள்ளன. இவர் புரிந்து கொண்ட உண்மைகளை கடந்த 08 வருடங்களாக மக்களுக்கு சொல்லி வருகின்றார்.

இவர்தான் ஹீலர் பாஸ்கர் என்று பொதுவாக எல்லோராலும் அறியப்படுகின்றார். செவி வழி தொடு சிகிச்சை மூலம் 95 சதவீத நோய்களுக்கு மருந்து, மாத்திரை இல்லாமல் பூரண தீர்வு காண முடியும் என்று சான்றுகள், சாட்சிகள் மூலம் நிரூபிக்கின்றார். எயிட்ஸ், புற்று நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியனவும் இவற்றில் அடங்கும். உணவே மருந்து, எண்ணமே வாழ்க்கை என்பது இவரின் தாரக மந்திரம்.

இவருடைய அறிவூட்டல், விழிவூட்டல் பிரசாரத்தை செவிமடுத்து இவரின் ஆலோசனைப்படி வாழ்பவர்கள் நோய்களில் இருந்து நிரந்தரமாக குணம் அடைய முடியும். குறைந்தது 120 வயது வரை மனிதன் வாழ முடியும் என்று அடித்துக் கூறுகின்றார்.

இவருக்கு மாஸ்டர் பாஸ்கர், பீஸ் ஓ பாஸ்கர் என்று இன்னும் இரு முகங்கள் உள்ளன. இவர் மனம் பற்றிய விடயங்களை பேசுகின்றபோது மாஸ்டர் பாஸ்கராகவும், புத்தி சார்ந்த விடயங்களை பேசுகின்றபோது பீஸ் ஓ பாஸ்கராகவும் அறியப்படுகின்றார்.

ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள் பலவற்றுக்கும் சென்று உள்ள ஹீலர் பாஸ்கர் அடிக்கடி இலங்கைக்கும் வருகின்றார். இலங்கையில் கடந்த வாரம் கொழும்பில் செவி வழி தொடு சிகிச்சையை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு செவி வழி தொடு சிகிச்சை மேற்கொள்ளவே வருகின்றார்.

இவரின் சேவையை பெற விரும்புபவர்கள் 0773023492 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.