கனேடிய பாராளுமன்றம் இலங்கை மீது ஐ.நா விசாரணை கோரியது….!!

ஈழத் தமிழர்களுக்காக சர்வதேச அரங்கில் அதுவும் மேற்குலக நாடுகளில் முக்கியத்துவம் பெரும் நாடுகளில் ஒன்றாகிய கனேடிய நாடாளுமன்றில் தமிழின அழிப்பு தொடர்பில் முதல் முறையாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

கனேடிய நாடாளுமன்றில் அங்கத்துவம் பெறுகின்ற ஒரே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்த சங்கரி அவர்களாகும். இவர் ஆளும் Liberal Party of Canada” எனும் கட்சியை சேர்ந்தவர். எதிர் கட்சியாக இருப்பது “Conservative Party” யாகும். இங்கு இந்த பிரேரணையினை முன்மொழிந்தவர் “New Democratic Party” எனும் மூன்றாம் நிலையிலுள்ள கட்சியைசேர்ந்த Cheryl Hardcastle என்பவராகும். பொதுவில் அணைத்து கடசிகளினாலும் எவ்வித எதிர்ப்பும் இல்லாது இப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாக பலராலும் மதிப்பீடு செய்யப்படுகிறது….!!

பிரேரணையின் சாராம்சம் பின்வருமாறு…..

அ) இந்தப் பேரவை இலங்கையில் வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது.

ஆ) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசிடம் கோருகிறது.

இ) ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1, 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்டவாறு, தெளிவான கால அட்டவணைக்கு அமைவாக அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கையிடம் கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் இடையில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது.

ஈ) 2009 ஆம் ஆண்டில் போரின் இறுதிப் பகுதி உட்பட்ட பகுதியில் இலங்கையில் தமிழர்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலை குறித்து விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கிறது.

a) extend its condolences to all the victims of violence and war in Sri Lanka;

b) call on the Government of Sri Lanka to promote justice for those affected by the Easter Sunday attacks, protect the rights of religious minorities, and defend all places of worship;

c) reaffirm Canada’s call for Sri Lanka to implement its obligations within a clearly specified time frame, as mandated under the UN Human Rights Council Resolutions 30/1 and 40/1; and re-affirms Canada’s support in advancing accountability, peace, and reconciliation among all peoples on the island; and

d) call upon the United Nations to establish an international, independent investigation into allegations of genocide against Tamils committed in Sri Lanka, including the last phase of the armed conflict in 2009.