கார்ல்ஸ் மாக்ஸ் இன் 200 ஆண்டு நினைவு தின நிகழ்வு

கனடா தமிழ் சங்க மண்டபத்தில் கார்ல் மாக்ஸ் இன் 200 பிறந்த தின கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மாக்சிச ஆர்வலர்களும் பொது மக்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கெண்டனர். கனடா கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட தவபாலன் மாஸ்ரர் பாலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கலந்துரையாடலில் கலந்து கொண்ட பலரும் தமது ஆழமான வாசிப்பு அனுபவங்களின் அடிப்படையில் கார்ல் மாக்ஸ் இன் சமூக விஞ்ஞாம் சம்மந்மான கருத்துக்களை பதிவு செய்னர். முன்பு எப்போதையும் விட சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவ வேண்டி அளவிற்கு முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்துள்ள நிலமையை உலக நாடுகளில் தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பலரும் தமது கருத்துக்களை வழங்கினர்.

சீனா கியூபா வடகொரியா வியட்நாம் போன்ற நாடுகளின் மாக்சிச சிந்தனையை நிலைநாட்டுவதற்கான பயணங்கள் பற்றியும் பிரஸ்தாபிகப்பட்டன. கூடவே தென் அமெரிக்க நாடுகள் ஆபிரிக்க நாடுகளில் நடைபெற்றுவரும் ஏகாதிபத்திய எதிர்பு அரசியல் செயற்பாடுகளும் கிலாகிக்கப்பட்டன. தற்போது உருவாகியுள்ள இணைத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் மனிதர்களை தனிமைப்படுத்தும் செயற்பாட்டடை செய்வதற்கு தமது திட்டமிட்ட செயற்பாடுகளை நடாத்தி வருவதையும் சுயசார்பு பொருளாதாரம் அடிபட்டுப் போய் தங்யிருக்கும் பொருதார அமைப்பு திறந்த பொருளாதாரம் என்ற போர்வையில் உருவாகப்பட்டு நவீன காலனித்துவ ஆட்சிகளை பல நாடுகளில் முதலாளித்துவம் நிறுவுவகதற்கான கபடச் செயற்பாடுகளை செய்து வருவதும் இங்கும் கருத்துரையாக தெரிவிக்கப்பட்டது. 4 மணி நேரமாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது