கியூபாவிற்கான பயண அனுபவங்களும் கியூபாவின் உள்ளக நிலமைகளும் கலந்துரையாடல்

ஆக்க பூர்வ மற்றும் சிந்தனை மையம் ஒழுங்கு செய்த கியூவிற்கான பயண அனுபவங்கள் மற்றும் கியூபாவின் உள் கள நிலைமைகள் பற்றிய அனுபவக் கலந்துரையாடல் ரொறன்ரோ கனடாவில் நேற்று நடைபெற்றது. கனடா கியூப நட்புறக் களத்தின் பிரநிதிகளும் இலங்கையிற்கான பிரநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பரிமாறினார். கியூபா தொடர்ந்தும் பிடல் காஸரோ காட்டிய வழியல் சுய சார்புடைய சோசலிச கொள்கையுடன் உறுதியாக தன்னை நிலை நிறுத்தி முன்னேறிக் கொண்டிருப்பதும் இதற்கு பெரும் தடையாக இருக்கும் அமெரிக்காகா அதன் நேச நாடுகள் விதிக்கும்பொருளாதார தடைகளும் இன்னபிற மறைமுக முதலாளித்து நாடுகளின் இடைஞ்சல்கள் பற்றியும் கருத்துரை வழங்கப்பட்டது .

உல்லாசப் பயணத்திற்கான தட்ப வெப்ப நிலைகளுக்கு அப்பால் பாதுகாப்பான இனிமையான பலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செலவில் சென்று வரக் கூடிய மரியாதையான இடம் என்பதை பலரும் தமது அனுபவப் பதிவாக பதிந்தனர். குடும்ப சகிதம் சென்று வருவதற்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருப்பதும் இயற்கை உணவு வகைகளை தன்னகத்தே கொண்டு தரம் வாய்த நிறைவான பயணமாக இது அமைந்ததாகவும் கருத்துரை வழங்கினர். கியூப மக்கள் நிறைவான வாழ்வை வாழ்கின்றனர். ஆடம்பரம் அற்ற வாழ்வை தொடர்கின்றனர். புயல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் இதுவரை போதியளவு வசதியான வீட்டுத் திட்டங்களை முழுமையாக செய்து முடிக்க முடியாமைக்கான பிரதான காரணியாக இருப்பதாகவும் போக்குவரத்திற்கு போதிளவு வசதிகள் ஏற்படுத்த முடியாது அமெரிக்காவின் வாகனத் இறக்குமதி தடையும் பெரும் சவாலாக இருப்பதாக கருத்துரைகள் வழங்கப்பட்டன.