குடிசை பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இரண்டு மாதங்களில் கோவை முத்தண்ணன் குளம் பகுதியிலிருந்து ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டுள்ளன
இந்த மக்கள் வாழும் நிலப்பகுதிகள் வணிகத்திற்கு பலனின்றி உள்ளன.

நகர விரிவாக்கத்துக்கு தடையாக உள்ளன என்று பெரு முதலாளிகளும், அவர்களது ஏஜெண்ட் அரசும் கருதுகின்றன.

எனவே இந்தியா முழுவதும் பெரு நகரங்களில் இருந்து மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஜவஹர் நகர் புனரமைப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என ஒவ்வொரு நகர உள்கட்டமைப்பு திட்டத்திலும் குடிசைத் பகுதிகளை அப்புறப்படுத்த தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த புதிய உலகமய அரசு காடுகளையும், கடற்கரையும் வணிக பயன்பாட்டுக்கு கொண்டுவர பழங்குடி மக்களையும், மீனவர்களையும் வெளியேற்றி வருகிறது. விவசாயிகளும் கூட வளர்ச்சி திட்டங்களுக்கு தங்கள் நிலங்களை இழந்து வருகின்றனர். இது ஒவ்வொரு நொடியும் நிகழ்கிறது.

அரசு நாடு தழுவிய அளவில் திட்டமிட்டு செயல்படுகிறது. ஆனால் எதிர்த்துப் போராடுபவர்கள் தங்கள் நிலப்பரப்பைக் மட்டும் பார்க்கின்றனர். ஒவ்வொரு போராட்டமும் தனிமைப் படுத்தப்படுகிறது.
எல்லா அப்புறப்படுத்தல் நிகழ்வுகளின் போதும் அந்த பகுதியின் தனித்த சிறப்பியல் புகளை கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம்.

அதே நேரம் மொத்தமான, முழுமையான பார்வையும் அவசியம். இதை கம்யூனிஸ்ட் வறட்டுத் தனம் என்று கூறி கைவிட்டதன் காரணமாக இந்த அதிகார வர்க்க செயல்பாடுகளின் அரசியல் பொருளாதார பின்னணிகள் தவற விடப்படுகின்றன என்று தோன்றுகிறது. நாடு முழுவதும் பாதிக்கப் பட்டுக் கொண்டு இருக்கும் மக்கள் இணைந்து நிற்பதற்கான வாய்ப்புகள் தவற விடப் படுகின்றன.