‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’

அரசியலில், நாம் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளோம். சர்வதேச சமூகத்தை, முற்று முழுதாக நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. கொழும்பை முற்றாகப் புறக்கணித்துக்கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு, எந்த நாடும் இன்று தயாரில்லை. அவர்களுக்கு சில எல்லைகள் உண்டு; சில சாத்தியங்களும் உண்டு. ஆகவே, இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். மக்களைப் பொய்யான வழிகளில் அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியாது. அது அவர்களுக்குச் செய்கின்ற அநீதியாகும், துரோகமாகும்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.