க.அருளம்பலம்(ஆசிரியர்) அவர்களின் 29வது வருட நினைவு நாள்

 

கணபதிப்பிள்ளை-அருளம்பலம் அவர்கள் மட்டக்களப்பின் தெற்கே பெரியகல்லாறு எனும் இடத்தில் 29.08.1930 இல் பிறந்தார்.
சிறந்த தழிழ் ஆசிரியரான இவர். இலங்கையின் பல இடங்களில் ஆசியரிராகப் பணியாற்றியுள்ளார். குறிப்பாக மிகவும் பின்தங்கிய இடங்களைத் தேர்வு செய்து தனது பணியை ஆற்றினார். பின்தங்கிய பகுதிகளைத்தேர்வு செய்து அவர்களுக்கு சேவை செய்வதில் அலாதி பிரியம் அவரிடம் காணப்பட்டது.அதில் ஒரு ஆத்ம திருப்தி இருப்பதாக என்னிடம் எனது தந்தை கூறி இருக்கிறார்.தற்போது நானும் அதை உணர்கிறேன்.


குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை, காயாங்கேணி, 16ம் கொலனி, ஆகிய மிகவும் பின்தங்கிய இடங்களிலும், அம்பாரை மாவட்டத்தில் உள்ள அளிகம்மை போன்ற இடங்களிலும் தனது ஆசிரியப்பணியைச் செய்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்ஸ்ரனிஸ், தியாகிகள் அ.செல்வகுமார்(தோழர்குணம்),அ.இராகவன்(தோழர்காளி) ஆகியோரின் தந்தையுமான இவர் 4.2.1987 இல் காலமானார்.
இந் நாளில் எனது தந்தையை நினைவுகொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
தோழர்ஸ்ரனிஸ்