’சர்வாதிகார ஆட்சியமைக்க முயற்சி’

தேர்தல்கள் எதனையும் நடத்தாது சர்வாதிகார ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினூடாக போராடும் உரிமை பறிக்கப்படுமெனவும், எதிர்க்கட்சியினரின் கூட்டங்களின்போது, பொலிஸாருடன் முரண்படுவது, பயங்கரவாத செயற்பாடாக கருதப்பட்டு கட்சியை நீக்குவதற்கும் இடமிருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.