சிரியாவில் ரஷ்ய பிரசன்னம் அதிகரிப்பு

சிரியாவில் தனது இராணுவ செயற்பாடுகளை ரஷ்யா அதிகரித்திருப்பதாக வெளியான செய்தி குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கவலையை வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் பங்கேற்பு பிரச்சினையை தீர்க்க உத வாது என்று நேட்டோ தலைவர் nஜன்ஸ் ஸ்டொ ல்ட்பேர்க் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் ரஷ்ய வெளியு றவு அமைச்சர் செர்கே லவ்ரோவை தொலைபேசி யில் தொடர்புகொண்ட அமெரிக்க இராஜhங்கச் செய லாளர் ஜோன் கெர்ரி இந்த விவகாரம் குறித்து கவ லையை வெளியிட்டுள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ரஷ்யா, சிரிய அரசின் முக் கிய நட்பு நாடாக செயற்படுவதோடு சிரியாவுக்கு இராணுவ நிபுணர்களை மாத்திரம் அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் ஆதரவு இல்லா மல் இருந்தால் சிரிய ஜனாதிபதி ப’ர் அல் அஸாத் இந்த தருணமே வீழ்ந்து விடுவார் என்று அவதா னிகள் கணித்துள்ளனர்.

கடந்த ஒருசில தினங்களில் சிரியாவின் துறைமுக நகரான டார்டுஸில் இருக்கும் ரஷ்யாவின் கடற் படை முகாமிற்கு டாங்கிகளைக் கொண்ட இரு கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் அனுப்பப்ப ட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்ட ருக்கு குறிப்பிட்டுள்ளார். இதன்போது குறிப்பிடத்த க்க எண்ணிக்கையிலான ரஷ்ய தரைப்படையினரும் சிரியாவிற்கு அனுப்பப்பட்டிப்பதாக குறிப்பிடப்பட்டு ள்ளது.

எனினும் இவையெல்லாம் புதிதானவை அல்ல என்று குறிப்பிட்டிக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச் சின் பேச்சாளர், மொஸ்கோ சிரியாவுக்கு மிக நீண்ட காலமாக ஆயுதங்களையும் இராணுவ நிபுணர்க ளையும் வெளிப்படையாக வழங்கி வருகிறது என் றார்.

‘சிரியாவுடன் இராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியில் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்கி வருவதில் ரகசியம் ஒன்றும் அல்லை” என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா குறிப்பிட் டார். எனினும் தனது நாட்டில் ரஷ்யா இராணுவத்தை குவிப்பதாக வெளியான செய்தியை சிரிய அரச தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.

சிரிய யுத்தில் ரஷ்ய துருப்பினர் ஏற்கனவே சண் டையிட்டு வருவதாக பெயர் குறிப்பிடாத லெபனான் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஈரான் வான் பகுதியில் ரஷ்ய விமா னங்களுக்கு சிரியாவை நோக்கி பறக்க அனுமதி கிடைத்து விட்டதாக ஈரானுக்கான ரஷ்ய தூதரகம் ரஷ்ய ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஈரான் தரப்பு இதனை உறுதி செய்யவில்லை. சிரி யாவை நோக்கி பயணிக்கும் ரஷ்ய விமானத்தி ற்கு பல்கேரியா மற்றும் கிரீஸ் நாடுகள் தனது வான் பரப்பில் அனுமதி அளிக்காததாலேயே ரஷ்யா மாற்று பாதையை பயன்படுத்த முயற்சிக்கிறது.

ரஷ்யா தனது இராணுவ பிரசன்னத்தை சிரியா வில் அதிகரித்திருப்பது உறுதியானால் அது மிகப் பெரிய வன்முறைக்கு இட்டுச் செல்லும் என்று ஜோன் கெர்ரி, லவ்ரோவிடம் எச்சரித்துள்ளார். மேலும் மோதல் களை அதிகரிக்கும் செயற்பாடுகள் குறித்து பிரான்ஸ் மற் றும் nஜர்மனி நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்கா தற்போது தனது சொந்த போர் விமா னங்களை பயன்படுத்தி இஸ்லாமிய தேசம் குழுவு க்கு எதிராக சிரியா மற்றும் ஈராக்கில் வான் தாக் குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சிரியாவில் அசாத் அரச படை அண்மைய தினங்களில் பெரும் நிலப்பகுதிகளை இழந்து வரும் நிலையிலேயே அந்த அரசுக்கு ஆதர வாக ரஷ்யாவின் உதவிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக அஸாத் அரசுக்கு எதி ராக ஐ.எஸ் குழுவின் அச்சுறுத்தல் அதிகரித்துள் ளது. இதில் அஸாத் அரசு கடந்த புதன்கிழமையா கும்போது இத்லிப் மாகாணத்தில் இருக்கும் பிரதான விமானத் தளத்தையும் கிளர்ச்சியாளர்களிடம் இழ ந்தது. வட கிழக்கு மாகாணத்தில் அரச படையினர் வசமிருந்த கடைசி நிலைகளில் ஒன்றாகவே இந்த விமானத் தளம் இருந்து வந்தது.

அஸாத் அரசு கடந்த 2011ம் ஆண்டிலிருந்து பல்வேறு கிளர்ச்சி குழுக்களுடனும் யுத்தத்தில் ஈடு பட்டு வருகிறது. இந்த மோதல்களில் இதுவரை குறை ந்தது 240,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.