ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, கோட்டாவுக்குத் தடையில்லை

சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்திரகுப்த தேனுவரவும் காமினி வியங்கொடவினாலும், இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கோட்டாபய, இலங்கையின் குடியுரிமையை முறையாகப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால் அவரிடமுள்ள இலங்கைக் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, இரட்டைக் குடியுரிமைக்கான சான்றிதழ் ஆகியவற்றைச் செயலிழக்கச் செய்யவேண்டும் என்றும், மனுதாரர்களால் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு குறித்த பரிசீலனைகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொட, நீதியரசர்களாக அர்ஜுன ஒபேசேகர, மஹிந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினமும் நேற்றும், இன்றும் இடம்பெற்றுவந்த நிலையில், இன்று (04) மாலை 6 மணிக்கு, மனுவை நிராகரிப்பதாக, நீதியரசர்கள், ஏகமனதாகத் தீர்மானமெடுத்து அறிவித்தனர்.