ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளதால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய அமைச்சர்களுக்கு பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என ​நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், நாட்டை பிரிவுப்படுத்தும் அரசியலமைப்பைக் ​கொண்டு வந்தமை, உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளால் கடன்பட்டிருந்த மக்களின் கோபம் தேர்தல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (11) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் அரசாங்கத்தை தோற்கடித்து எதிர்கட்சி ஒன்று வெற்றிப் பெற்ற சம்பவமானது வரலாற்றில் என்றுமே இடம்பெற்றதில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.