ஜனாதிபதியை கொல்ல முயற்சி: குற்றவாளியை மன்னிக்க ஜனாதிபதி இணங்கினார்

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை, படுகொலை செய்வதற்கு முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வழக்கின் பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று வியாழக்கிழமை கொண்டுவந்துள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியை சிவராஜா ஜெனிகன் என்பவரையே குற்றவாளியாக ஏற்கெனவே இனங்கண்டிருந்த மேல் நீதிமன்றம் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாயை தண்டமாகவும் விதித்திருந்தார். சிறைத்தண்டனைக்கும், 10 ஆயிரம் ரூபாய் தண்டத்துக்கு எதிராகவும் குற்றவாளி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

அந்த மேன்முறையீட்டு மனு, மேன்முறையீட்டு தலைவர், நீதியரசர் மலல்கொட மற்றும் தேவிகா லிவேரா தென்னேகோன் ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதிவாதியின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆஜரான சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா, மேன்முறையீடு செய்துள்ள குற்றவாளிக்கு, ஜனாதிபதி மன்னிப்பளிப்பதற்கு தயாராக இருப்பதாக அறியமுடிகின்றது.

ஆகையால், இந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அறுவுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். பொலன்னறுவை அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் வைத்து இன்னும் இருவருடன் இணைந்து மேற்படி குற்றவாளி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை படுகொலைச்செய்வதற்கு முயன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன். அவரை, கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டு மேற்கண்ட தீர்ப்பையளித்திருந்தது.