‘தமிழகத் தலைவர்களின் விமர்சனம் தமிழர் வாழ்வுக்கு கேடு விளைவிக்கும்’

இது குறித்து, அவர், இன்று (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, புதிய ஜனாதிபதியை அணுகி, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய மாநிலங்களுக்குள்ள அதிகாரத்தை ஒத்த ஓர் அரசமைப்பைப் பெற்றுத்தர இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முயற்சிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களில் ஒரு சிலரினதும் புலம்பெயர் நாட்டுப் பிரமுகர்கள் சிலரினதும் அறிக்கைகள், இங்குள்ள தமது சகோதர இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் வலுவடையச் செய்யுமே தவிர, வேறு ஆக்கபூர்வமான எதையும் செய்யப்போவதில்லையெனத் தெரிவித்துள்ள அவர், இதை நீங்கள் உணர்ந்து, இன முறுகலை ஏற்படுத்தாதவாறு உங்கள் அறிக்கைகள் அமைய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீங்கள் அக்கறையெடுத்துச் செயற்பட விரும்புவீர்களேயானால், தாம் ஒரு புத்திஜீவிகள் அடங்கிய தூதுக்குழுவாக உங்களைச் சந்தித்து, உங்கள் ஆலோசனைகளைப் பெற்று, தமது பிரச்சினைக்கு ஒரு தீர்வை அடைய ஆர்வமுடன் இருப்பதாகவும், அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.