தமிழக அரசின் பதிவுத்துறை-ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(oferr) இணைந்து நடாத்திய திருமணப்பதிவு முகாம்

தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 19.12.15 அன்று திருமணப்பதிவு முகாம் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் உத்தரவுக்கிணங்க பதிவுத்துறையினர் மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தினர் இணைந்து நடாத்தினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள நான்கு முகாம்களில் இந்த திருமணப்பதிவு முகாம் நடைபெற்றது.


உச்சப்டடி முகாமில் நடைபெற்ற திருமணப்பதிவு முகாமில் மதுரை தெற்கு சார்பதிவாளர் மற்றும் ஊழியர்கள் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனா.; இந்த முகாமில் 21 இந்து திருமணங்கள்,12 விசேட திருமணங்களும் பதிவு செய்யபட்டது.

அதேபோல் ஆனையூர் முகாமில் 11 இந்து திருமண பதிவுகளும்,1 விசேட திருமணப்பதிவும் பதியப்பட்டுள்ளது.கூடல் நகர் முகாமில் 5 விசேட திருமணப்பதிவகள் பதியப்பட்டுள்ளது..இங்கு நடைபெற்ற முகாமில் பழங்காநத்தம் சார்பு பதிவாளர் மற்றும் ஊழியர்கள், ஈழ ஏதியிலியர் மறுவாழ்வுக் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவாதவூர் அகதிகள் முகாமில் நடைபெற்ற திருமணபதிவு முகாமில் மதுரை வடக்கு சார் பதிவாளர் மற்றும் உழியாக்ளுடன் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் 10 விசேட திருமணப்பதிவுகளும்,11 இந்து திருமணப்பதிவகளும் நடைபெற்றது.

இந்த திருமணப்பதிவுகள் மூலம் முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிறப்புச்சான்று மற்றும்,இலங்கை குடியுருமைச் சான்று என்பவற்றை இலகுவாக எடுக்க முடியும்.இவற்றை பெறுவதற்கு திருமணப்பதிவு அவசியமாக உள்ளது. இந்த திருமணப்பதிவு முகாம் மூலம் பயணடைந்தவர்கள் தமிழக அரசுக்கும்,ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக தொண்டு நிறுவனத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.